நாமக்கல், மார்ச் 1-
நாமக்கல்லில் தீக்கதிர் வளர்ச்சி நிதிக்கான தயாரிப்புக் கூட்டம் நடைபெற்றது. பி.பெருமாள் தலைமை வகித்தார். மாநில கன்ட்ரோல் கமிசன் தலைவர் கே.துரை ராஜ், தீக்கதிர் கோவை பதிப்பின் பொது மேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம் ஆகியோர் பேசினர்.இதில் மாவட்டச் செயலாளர் எ.ரங்கசாமி, இடைக்கமிட்டி செயலாளர்கள் மற்றும் தீக்கதிர் முகவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மார்ச் 13 மற்றும் 14ம் தேதிகளில் மாவட்டம் முழுவதும் தீக்கதிர் வளர்ச்சி நிதி ரூ.1லட்சம் வசூலிப்பது என முடிவு செய்யப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் என்.சீனிவாசன், கன்ட்ரோல் கமிசன் தலைவர் கே.துரைராஜ் உள்பட 62 குழுக்களாக வசூலில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: