திருச்சிராப்பள்ளி, மார்ச் 1-
தஞ்சையில் ரயில்வேயில் துப்புரவுத் துறையில் பணி யாற்றும் 45 ஒப்பந்த தொழி லாளர்கள் கடந்த 28ம்தேதி நடைபெற்ற அகில இந்திய பொதுவேலை நிறுத்தத்தில் பங்கேற்றதையடுத்து, இவர் களை எவ்வித முன் அறிவிப்புமின்றி ஒப்பந்த காரரும், ரயில்வே நிர்வாக மும் கூட்டாக சேர்ந்து வேலை நீக்கம் செய்துள்ளனர். இதைக் கண்டித்தும் திருச்சி டீசல்ஷெட்டில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக் கூலியாக ரூ.212 வழங்காமல் ரூ.100 வழங்குவதை கண்டித் தும் வியாழனன்று காலை 6 மணிமுதல் ஒப்பந்த துப் பரவு தொழிலாளர்கள் திருச்சி ஜங்சன் டிஆர்எம் அலுவலகம் முன் வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு ரயில்வே ஒப்பந்த தொழி லாளர் சங்க மாநில செயல் தலைவர் டி.மனோகரன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் எஸ். மதியழகன், கோட்ட செய லாளர் பாபுராவ், மாநில துணைசெயலாளர் ஏ.லட்சு மணன் மற்றும் மாநில கோட்ட நிர்வாகிகள் போராட்டத்தை விளக்கி பேசினர். இதே போல் திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட பொன்மலை டீசல்ஷெட், மயிலாடுதுறை, தஞ்சை, கும்பகோணம், விழுப்புரம், விருத்தாச்சலம் ஆகிய இடங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களும் சுமார் 500பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: