சென்னை, மார்ச் 1-இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு மார்ச் 5-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத் துகிறது.இதுதொடர்பாக கட்சி யின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வியாழ னன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-இலங்கையில் அரசுக் கும், விடுதலைப்புலிகளுக் கும் இடையிலான இறுதிக் கட்டப் போரில் இலங் கைத்தமிழர்கள் பல்லாயி ரம் பேர் கொல்லப்பட்ட தும், கைது செய்யப்பட்ட வர்கள் இதுவரை விடுதலை செய் யப்படாததும், பலத்த காய முற்றவர்களுக்கு சிகிச் சை மறுக்கப்பட்டதும் உள் ளிட்ட மனித உரிமை மீறல் தொடர்பான குற்றங்கள் மீது போர் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இலங்கை அரசு எந்த நட வடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இது தொடர்பாக மத்திய அரசும் இலங்கை அரசை நிர்ப்பந் திக்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயற்குழு இதனை வன்மையாகக் கண்டிக் கிறது. எனவே, இலங்கையில் ஆயுத மோதலின் இறுதிக் கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் மீது நம் பகத்தன்மை வாய்ந்த, சர்வ தேசத் தரத்திலான, சுயேச் சையான விசாரணை கால தாமதமின்றி நடத்தப்பட வும், போர்க்குற்றங்கள் நிகழ்த்திய போர்க்குற்ற வாளிகள் மீது உரிய நடவ டிக்கை எடுக்கப்படவும் இலங்கை அரசை, இந்திய அரசு நிர்ப்பந்திக்க கட்சி யின் மாநில செயற்குழு வலி யுறுத்துகிறது. இலங்கை முகாம்களில் அடைக்கப் பட்டுள்ள அனைத்து இலங் கைத் தமிழர்களையும் அவர்களின் சொந்த இடங்க ளில் மீள்குடியமர்த்தி, இயல்பு வாழ்க்கை தொடர் வதை உறுதிப்படுத்திடவும், இலங்கைத்தமிழர்களுக்கு சம அந்தஸ்து, சம உரிமை உள்ளிட்ட சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வை ஏற்படுத்திடவும் தேவையான நடவடிக்கை களை மத்திய அரசு எடுத் திடவும் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்து கிறது. மேற்கண்டவற்றை முன் னிறுத்தி இலங்கை அரசை யும், இந்திய அரசையும் வலியுறுத்தி மார்ச் 5 அன்று காலை 11 மணி அளவில் சென்னையில் உள்ள இலங் கைத்தூதரகம் முன்பு பெருந் திரள் கண்டன ஆர்ப்பாட் டம் கட்சியின் மாநிலச்செய லாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற வுள்ளது. இந்த ஆர்ப்பாட் டத்தில் திரளாக கட்சி அணி களும், ஜனநாயக சக்தி களும், மனித உரிமை ஆர் வலர்களும் பங்கேற்க மார்க் சிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
——————————————————————-
நம் பகத்தன்மை வாய்ந்த, சர்வதேசத் தரத்திலான, சுயேச்சையான விசாரணை கால தாமதமின்றி நடத்தப்படவும், போர்க்குற்றங்கள் நிகழ்த்திய போர்க் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவும் இலங்கை அரசை, இந்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்.
——————————————————————-

Leave A Reply

%d bloggers like this: