நாமக்கல், மார்ச் 1-
நாடு முழுவதும் சமை யல் எரிவாயு விநியோகத்தை மத்திய அரசுக்கு சொந்த மான ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி ஆகிய ஆயில் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
இதற் காக சமையல் எரிவாயு டேங் கர் லாரி உரிமையாளர் களுடன் 3 ஆண்டுக்கு ஒரு முறை வாடகை ஒப்பந்தம் செய்து கொண்டு சமையல் எரிவாயு கொண்டு செல்லப் படுகிறது. நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு, கேரளா, ஆந் திரா, பாண்டிச்சேரி, கர்நா டகா ஆகிய 5 மாநிலங் களை உள்ளடக்கி தென் மண்டல எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையா ளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு அக்டோ பர் 31ம் தேதியுடன் டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஆயில் நிறுவனங்களுடன் செய்து கொண்ட வாடகை ஒப்பந்தம் முடிவடைந்து விட்டது.
இந்நிலையில் புதிய வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும், டெண் டரில் புதியதாக பங்கேற்ற 600 வாகனங்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கேஸ் டேங்கர் லாரிகள் புதனன்று (பிப். 29) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டுள்ளன.இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஜனவரி 12ம் தேதி முதல் 6 நாள் டேங்கர் லாரி உரிமையா ளர்கள் போராட்டம் நடத் தினர்.
அப்போது, தமிழக அரசு அதிகாரிகள் முன்னி லையில் நடந்த பேச்சுவார்த் தையின்போது ஒப்புக் கொண்டபடி புதிய வாடகை ஒப்பந்தத்தை ஆயில் நிறு வனங்கள் இன்னும் ஏற் படுத்தவில்லை. இதனால் மீண்டும் வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டுள்ளனர்.தென்மண்டலம் முழு வதும் புதனன்று நள்ளிரவு முதல் 4 ஆயிரம் எல்பிஜி டேங் கர் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இத னால், 52 கேஸ் பாட்டிலிங் பிளான்ட்கள், 11 லோடிங் பாயின்ட்களில் இருந்து டேங்கர் லாரிகளில் லோடு ஏற்றுவது நிறுத்தப்பட்டுள் ளது.டேங்கர் லாரி வேலை நிறுத்தம் தொடங்கியுள்ள தால் தமிழகத்தில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து தென்மண் டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செய லாளர் கார்த்தி கூறும்போது, எங்கள் கோரிக்கைகள் நிறை வேறும் வரையில் போராட் டம் தொடரும். இதனால் லாரி உரிமையாளர்களுக்கு தினமும் 2.5 கோடி இழப்பு ஏற்படும் என்றார்.வேலை நிறுத்தத்தால் லாரி டிரைவர்கள், கிளீனர் கள், பாட்டிலிங் பிளான்ட் தொழிலாளர்கள் என 30 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.