தஞ்சாவூர், மார்ச் 1 –
தஞ்சாவூர் நகராட்சியில் பாதாளச் சாக்கடை திட் டத்தை பயன்படுத்தி குடி யிருப்பு மற்றும் கட்டிடங் களுக்கு இணைப்பு பெற் றுக் கொள்ளுமாறு நக ராட்சி ஆணையர் அறிவித் துள்ளார்.இணைப்பு பெற்றுக் கொள்ளாத குடியிருப்பு மற் றும் கட்டிட உரிமையா ளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.வைப்புத்தொகை செலுத்தியுள்ளவர்கள் நிலுவை வைப்புத்தொகை யை மட்டும் செலுத்தி பயன்பெறலாம். வைப்புத் தொகை செலுத்திய பிறகு இணைப்பு பெறாதவர் களின் வைப்புத்தொகை பறி முதல் செய்யப்படும். மேலும், வணிக உப யோகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் பிரதான தொட்டி அமைக்க தவறும் பட்சத்தில் அபராதம் விதிக் கப்படும், குடியிருப்பில் உள்ள கழிவறைக்கும் நச்சுத் தொட்டிக்கும் உள்ள இணைப்பும் துண்டிக்கப் படும். எனவே கட்டிடத்தின் தன்மைக்கேற்ப வைப்புத் தொகை செலுத்தி உடனடி யாக இணைப்பு பெற்றுக் கொள்ளாதவர்கள் மீது 1939ம் வருட சுகாதார சட்ட விதிகள்- 44 (1.2) 51, 123-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.