சென்னை, மார்ச் 1 –
டாஸ்மாக் கடைகளின் நேரம், விற்பனையை கூடுத லாக்க டாஸ்மாக் நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கை யில் தமிழக முதல்வர் தலை யிட வேண்டுமென சிஐடியு மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை கூடுத லாக்கும் வகையில், கடை ஊழியர்களுக்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் மூலமாக வாய்மொழி உத்தர விடப்பட்டுள்ளது.
தமிழக அரசு மதுபான கடைகளை ஏற்று நடத்திய போது சட்டப்படியான வேலைநேரமான 8 மணி நேரம் என்பதை அமலாக்கு வதற்கு பதிலாக, காலை 8 முதல் இரவு 12 மணி வரை என மொத்தம் 16 மணி நேர வேலையாக இருந்ததை ஊழியர்களின் தொடர் போராட்டத்தாலும், நீதி மன்ற நடவடிக்கைகளா லும் 4 மணி நேரம் குறைக் கப்பட்டு 12 மணி நேரமாக இருந்து வருகிறது. 8 மணி நேர வேலை என்பதை நடைமுறைப்படுத்தவும், தேவைப்படின் ஷிப்ட் முறையை நடைமுறைப் படுத்தவும் முன்வர வேண்டும்.
தற்போது டாஸ்மாக் நிர் வாகம் தன்னிச்சையாக எழுத்துப்பூர்வமான அறிக் கை ஏதும் வெளியிடாமல், விற்பனை நேரத்தை கூடுத லாக்கும் முயற்சியில் ஈடுபட் டுள்ளது கண்டிக்கத்தக்கது.தமிழகத்தில் மதுபான விற்பனை வீழ்ச்சி அடைந் துள்ளதாக வந்துள்ள செய்தி அனைவராலும் வரவேற்கக்கூடியது. அதே நேரத்தில் அரசும், டாஸ் மாக் நிர்வாகமும் கவலைப் படுவதில் நியாயமில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.மதுபான விற்பனை குறைவு என்பதை எந்த அளவுகோல் கொண்டு கணக்கிடப்படுகிறது என் பதை டாஸ்மாக் நிர்வாகம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயில் ஒழு கல் இருக்கிறது என்றால் அதற்கு டாஸ்மாக் அதி காரிகளின் நிர்வாக திறமை யின்மையும், போலி மற்றும் வெளி மாநில மதுபானங் கள் விற்பனையில் ஈடு படுவோருக்கு துணை போவதும் தான் காரணமேயன்றி, ஊழியர் களை பொறுப்பாக்குவது எந்த விதத்திலும் நியாய மாகாது.அரசுக்கு அதிக வரு வாயை ஈட்டித்தரும் டாஸ் மாக் நிறுவனத்தின் செயல் பாடுகளை முறைப்படுத் திடவும், ஊழியர்களுக்கு சட்டப்படியான உரிமை களை வழங்கிடவும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட் டுக்கொள்கிறேன்.
மேலும் டாஸ்மாக் கடையின் விற்பனை நேரத் தை கூடுதலாக்கும் முயற்சி யையும் மதுபான விற்பனை யை அதிகப்படுத்தும் முயற் சியையும் தடுத்து நிறுத்திட தமிழக முதல்வர் உரிய நட வடிக்கைகளை மேற் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

Leave A Reply

%d bloggers like this: