சேலம், மார்ச். 1-
பிப்- 28ம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்ததையொட்டி சேலம் மாவட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், எல்பிஎப், பிஎம்எஸ் ஆகிய மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் சேலம் நகரம், ஓமலூர், சங்ககிரி, மேட்டூர், ஜலகண்டாபுரம், ஆத்தூர், ஏற்காடு உள்ளிட்ட மையங்களில் பேரணி- ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் நகரத்தில் கோட்டை மைதானத்தில் இருந்து அனைத்து சங்கத்தினர் தலைமையில் பேரணி துவங்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக சென்று தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு சார்பில் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆர்.கருமலையன், மாநில துணை தலைவர் எஸ்.கே.தியாகராஜன், மாவட்டத் தலைவர் பி.பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் டி.உதயகுமார், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, ஆர்.வைரமணி உட்பட ஏஐடியுசி சார்பில் பி.பரமசிவம், வேணுகோபால், விமலன், ஐஎன்டியுசி சார்பில் எம்.கல்யாணசுந்தரம், நடராஜ், எச்எம்எஸ் சார்பில் கணேசன், கோவிந்தன், எல்பிஎப் சார்பில் உதயகுமார், கருப்பையா, பிஎம்எஸ் சார்பில் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து சங்க நிர்வாகிகள் உட்பட 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.மேட்டூரில் மாதா கோவில் முன்பிலிருந்து பேரணி துவங்கப்பட்டு ஸ்டேட் பேங்க் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் வி.இளங்கோ, சி.கருப்பண்ணன், பி.கே.சிவகுமார், செந்தில்வேலன், ஏஐடியுசி சார்பில் ஆர்.வி.ராஜேந்திரன், ஐஎன்டியுசி சார்பில் பாலசுப்பிரமணியம் உட்பட 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய பேரணி முக்கிய வீதிகளில் சென்று, ஸ்டேட் பேங்க் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்ட உதவி தலைவர் சி.மயில்வேலன், லோகநாதன், ரவி உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.ஜலகண்டாபுரம் அரசமர வளைவிலிருந்து பேரணி துவங்கி ஸ்டேட் பேங்க் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்ட உதவித் தலைவர் கே.சி.கோபிகுமார், எம்.கதிர்வேல், பொன்பீட்டர், சுப்ரமணி, வெங்கடேஷ், ஏஐடியுசி சார்பில் எம்.சந்திரன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ராஜாத்தி, விவசாய சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பி.தங்கவேல், டிஒய்எப்ஐ மாவட்ட பொருளாளர் நிரூபன்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சங்ககிரி சிஐடியு ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற பேரணி- ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ராமமூர்த்தி, எஸ்.ரவிச்சந்திரன், ஏஐடியுசி சார்பில் சி.ஆர்.ரத்தினம் உட்பட 150 பேர் பங்கேற்றனர். ஓமலூர் பயணியர் மாளிகை முன்பு துவங்கிய பேரணி முக்கிய வீதிகளில் சென்று, ஓமலூர் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்ட துணை செயலாளர் ஆர்.ஆறுமுகம், ஐஓசி சேகர், எஸ்.செல்லப்பாண்டியன், ஏஐடியுசி சார்பில் முனுசாமி, வாசுதேவன் மற்றும் கைத்தறி சங்க நிர்வாகிகள் உட்பட 250 பேர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: