2010 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது 2011 ஆம் ஆண்டில் தாய்லாந்தின் தொழில்துறை உற்பத்தி 15 விழுக் காடு அளவுக்கு சரிவடைந்துள்ளது. தொடர்ந்து ஐந்தாவது மாதமாக நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் கடுமையான சரிவு ஏற்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் பல முறை வெள்ளப் பெருக்கால் தாய் லாந்து பாதிக்கப்பட்டது. முக்கியமான பல்வேறு தொழிற் பூங்காக்கள் இதனால் இழுத்து மூடப்பட்டன. தொழிலுக்குப் பாதுகாப்பான நாடு என்ற கருத்தும் தகர்ந்துள்ளது.* * *கடந்த ஆண்டு ஏற்பட்ட மக்கள் எழுச்சியால் எகிப்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த ஹோஸ்னி முபாரக் ஜனாதிபதி பொறுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார். தற்காலிகமாக நிர்வகித்து வரும் ராணுவத்தினர், புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேதியை முடிவு செய்திருக்கிறார்கள். மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கும். முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் 50 சதவிகித வாக்குகளைப் பெறாவிட்டால் ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டாவது சுற்று நடைபெறும்.* * *
அண்மையில் மிகவும் சுதந்திரமான முறையில் சிரியாவில் நடந்த பொது வாக்கெடுப்பு முடிவை சீர்குலைக் கும் அமெரிக்காவின் முயற்சிக்கு ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானி கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்கு ஆசிய நாடுகளில் எழுந்துள்ள மக்கள் எழுச்சியை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் நியாயமாக நடை பெற்ற தேர்தலை ஒப்புக்கொள்ள முடியாது என்று முரண்டு பிடித்து வருகிறார்கள் என்கிறார் அவர்.

Leave A Reply

%d bloggers like this: