சென்னை, மார்ச்-1
வியாசர்பாடி எம்.கே.பி.நகர் 12வது மேற்கு தெருவைச் சேர்ந் தவர் கிருஷ்ணன். பெருங்குடியில் இரும்பு பொருட்கள் மொத்த விற் பனை வியாபாரம் செய்து வரு கிறார். இவரது மனைவி ஜானகி. இவர்களுக்கு ஆனந்தராஜ் (21), யுவராஜ் (17), திவ்யா (15), ஷீலா (11) என்ற நான்கு பிள்ளைகள் உள்ள னர். இதில் யுவராஜ் பாரிமுனையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறான்.கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவன் யுவராஜ் கடத்தப்பட் டான். அவனது நண்பர்கள் மற்றும் சிலர் அவனை கடத்தியதாக தெரிய வந்தது. இந்நிலையில் புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு மாணவனின் தந்தை செல்போனுக்கு ஒரு மர்ம அழைப்பு வந்தது.
அதில் பேசிய வன், உங்கள் மகனை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். 1 கோடி ரூபாய் கொடுத்தால் விட்டு விடு கிறோம். இல்லையென்றால் காலை யில் உங்கள் வீட்டு முன் யுவராஜ் பிணமாக கிடப்பான் என்று மிரட்டி விட்டு போனை வைத்து விட்டான்.இதையடுத்து காவல் துறை யினர் செல்போன் தகவலை வைத்து கடத்தல் கும்பலை பிடிக்க திட்டமிட்டனர். கொடுங்கையூர் எவரெடி காலனியில் இருந்து மர்ம தொலைபேசி அழைப்பு வந்திருப் பது தெரிய வந்தது. மேலும் அந்த தொலைபேசி எண் ராகவன் என்பவரது மகன் விஜயகுமாரின் எண் என்பதும் தெரிய வந்தது.
காவல் துறையினர் இரவோடு இரவாக வீட்டை கண்டு பிடித்து அதிகாலை 2.30 மணிக்கு அந்த வீட்டை முற்றுகையிட்டு, வீட்டிற் குள் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மாணவன் யுவராஜை மீட்டனர். விசாரணை யில் பணத்துக்கு ஆசைப்பட்டு மாணவனை விஜயகுமாரின் எண், அவரது நண்பர்கள் அஸ்லம்கான், அன்வர்கான் ஆகியோர் சேர்ந்து கடத்தியது தெரிய வந்தது.கைதான விஜயகுமார் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறான். அஸ்லம்கான், அன்வர்கான் இருவரும் சகோதரர் கள். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அஸ்லம்கான் செங் குன்றத்தில் உள்ள பிளாஸ்டிக் நிறு வனத்தில் வேலை பார்க்கிறான். அன்வர்கான் கல்லூரியில் படித்து வருகிறான். கைதான இவர்களிடம் இருந்து 5 துப்பாக்கிகள் மற்றும் 48 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: