இடைப்பாடி, மார்ச். 1-
இடைப்பாடி அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் சீராக வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் இடைப்பாடி அருகே உள்ள ஆலச்சம்பாளையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தனியார் ஏஜென்சி மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 45 நாட்களுக்கு பிறகு சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. மேலும் மாற்று சிலிண்டர்கள் இல்லாமலும், தினமும் சிலிண்டகள் வரும் என எதிர்பார்த்தும் வேலைக்கு செல்லபவர்கள் காத்திருப்பதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் இடைப்பாடி சாலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் சீராக வழங்கக்கோரி மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இடைப்பாடி போலீசார் பொதுமக்களிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் தனியார் ஏஜென்சியை தொடர்பு கொண்டபோது, டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் இருந்தே சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை விரைவில் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply