கோவை,மார்ச்.1-
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி வழி பி.எட் படிப்பிற்கான சேர்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பல்கலைக்கழக தொலைமுறை கல்விக்கூட இயக்குனர் தெரிவித்துள்ளதாவது, பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைமுறை கல்விக்கூடம் வழியாக நடத்தப்படும் பி.எட் பட்டப்படிப்பில் 2012-2013 ம் ஆண்டில் சேருவதற்காக தகுதிவாய்ந்த ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பம் பெற இந்த மாதம் மார்ச் 16 தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்புக்கான நுழைவுத்தேர்வு ஏப்ரல் 16 தேதி நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.