மன்னார்குடி, மார்ச் 1 –
நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும், பெண்ணு ரிமைப் போராளியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், எல் லோராலும் ‘அம்மா’ என்று அன்போடு அழைக்கப்பட்ட தோழர் கே.பி.ஜானகியம்மாளின் நினைவுதினம் வியா ழனன்று மன்னார்குடியில் கடைப்பிடிக்கப்பட்டது.மாதர் சங்கத்தின் நகரச் செயலாளர் பி.கலைச்செல்வி தலைமையில் மாதர்சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் கே. நீலமேகம் அம்மாவின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி உரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் ஏ. தங்கவேலு, ஒன்றியக்குழு உறுப்பினர் கே.டி.கந்தசாமி, நகரக்குழு உறுப்பினர்கள் தங்க.ஜெகதீசன், எம்.சிராஜ்தீன், ஜி.ரெகுபதி மற்றும் மாதர் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: