நாகர்கோவில், மார்ச் 1-
கூடங்குளம் போராட்டக் குழு வுக்கு ஜெர்மனியைச் சேர்ந்த ஹெர் மனிடமிருந்து மட்டும் ரூ. 12 கோடி அளவுக்கு பணம் வந்துள்ளதாகவும், அதிலும் கடந்த சில மாதங்களில் மட்டும் ரூ.4 கோடி பணத்தை போராட்டக்காரர்கள் பெற்றுள்ள தாகவும், இதுகுறித்து சிபிஐ தீவிர விசா ரணை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.கூடங்குளம் அணுமின் நிலை யத்தை திறக்கக் கூடாது என வலி யுறுத்தி கடந்த 7 மாதமாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
போராட்டக்குழு ஒருங்கிணைப் பாளர் உதயகுமாருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாக பிரதமர் மன் மோகன் சிங், மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் குற்றம் சாட்டினர்.இந்நிலையில், நாகர்கோவில் லாட் ஜில் தங்கியிருந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த ரெய்னர் ஹெர்மன் என்பவ ரை கடந்த 26ம் தேதி மத்திய உளவுப் பிரிவு போலீசார் மற்றும் கியூ பிரா ஞ்ச் போலீசார் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடந்த விசாரணைக் குப் பின்னர் உடனடியாக ஹெர்மன் நாடு கடத்தப்பட்டார்.கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் லால்மோகன் ஆகியோரு டன் இவருக்கு தொடர்பு இருந்ததாக வும், இதற்கான ஆதாரங்கள் இவரின் லேப்டாப், செல்போனில் இருப்ப தாகவும் தெரிய வந்தது.
ஹெர்மனின் லேப்டாப்பில் கூடங் குளம் அணுமின் நிலையம் தொடர் பான படங்கள், போராட்டங்கள் நடந்த படங்கள் உள்ளிட்டவை இரு ந்தன. அதை விட முக்கியமாக பணப் பட்டுவாடா குறித்த விவரங்களும் சிக்கியுள்ளன.தற்போது வழக்கு தொடரப்பட் டுள்ள நெல்லை, குமரி, தூத்துக்குடி யில் உள்ள 4 தொண்டு நிறுவனங் களுக்கும் இவர் மூலம்தான் பணம் சென்றுள்ளது. இதற்கான ஆதாரங் கள் இந்த லேப்டாப்பில் சிக்கியுள் ளன.
மேலும் இந்த அமைப்புகளு டன் ஹெர்மனுக்கு இருந்த தொடர்பு குறித்த ஆதாரங்கள் அவரது மொ பைல் போனிலும் இருந்தது. அதை யும் தற்போது சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் விசாரித்து வருகின்றனர்.இதுகுறித்து புதனன்று தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம் பரம் கூறுகையில், ஜெர்மனைச் சேர்ந்த ஹெர்மன் என்பவர் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்தவர். அவரது நடவடிக்கைகள் சுற்றுலா விசாவில் வந்தவருக்கு பொருத்தமான தாக இல்லை.
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களுடன் அவ ருக்கு தொடர்பு இருந்ததால் ஜெர்மன் நாட்டுக்கு அவர் திருப்பி அனுப்பப் பட்டார். அறக்கட்டளை பணிக்காக வெளிநாடுகளில் இருந்து வந்த நிதியை திருப்பி விட்டதாக 4 தொண்டு நிறு வனங்கள் மீது வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளன. இது குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது என்றார்.

Leave A Reply