திண்டுக்கல், மார்ச் 1-
கந்துவட்டிக் கொடுமை யின் காரணமாக திண்டுக் கல் அருகே குத்தகை விவ சாயி விஷம் அருந்தி தற் கொலை செய்து கொண்ட அவலம் நிகழ்ந்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அரு கேயுள்ளது நத்தப்பட்டி. இங்கு முத்துவீரன்(49) என்ற விவசாயி விவசாயம் செய்து வந்தார். இப்பகுதி யில் விவசாயிகள் குச்சிக் கிழங்கை அதிகம் பயிரிட்டு வருகிறார்கள். குச்சிக் கிழங்கு பயிரிடுவதற்காக இதே பகு தியில் உள்ள அதிமுக பிர முகருரான இளங்கோ விடம் ரூ.40 ஆயிரத்தை வட் டிக்கு கடனாகப் பெற்று முத்துவீரன் குச்சிக் கிழங்கை விவசாயம் செய்து வந்தார்.திடீரென்று குச்சிக் கிழங்கின் விலை வீழ்ச்சிய டைந்துள்ளது. ஒரு டன் குச்சிக் கிழங்கு ரூ.900க்கு விலை போனதால் முத்து வீரன் கவலையுற்றார். ஆனா லும் சந்தைக்கு குச்சிக் கிழங்கை ஏற்றிச் சென்ற போது வழியில் பணத்தைக் கேட்டு இளங்கே தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு பணத்தை எப் படியாவது கொடுத்துவிடுவ தாக முத்துவீரன் சொன்ன தையடுத்து இளங்கோ சென்றுள்ளார்.இதனையடுத்து கடந்த ஞாயிறன்று இளங்கோவும் அவரது அடியாட்களும் சேர்ந்து வந்து முத்துவீரன் தோட்டத்தில் இருந்த போது பணம் கேட்டு மிரட் டியதோடு அடித்துத் துன்பு றுத்தியதாகக் கூறப்படு கிறது. முத்துவீரனை அடிப் பதைப் பார்த்த அவரது மனைவி பாப்பாத்தி அந்த இடத்தில் இருந்து தப்பித் துச் சென்று விட்டார். இத னையடுத்து இளங்கோவும் அவரது அடியாட்களும் முத்துவீரனின் மாடு, ஆடு, எருமைகளை வட்டிக்காக பிடித்துச் சென்றனர். இந்த செய்தி ஊர் மக் கள் மத்தியில் பரவவே, அவமானமுற்ற முத்துவீரன் அன்றே விஷம் அருந்தி யுள்ளார். உயிருக்குப் போரா டிய அவர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி திங்களன்று இறந்துள்ளார். இதனையடுத்து முத்து வீரனின் மனைவி பாப் பாத்தி வேடசந்தூர் காவல் நிலையத்தில் இளங்கோ மற்றும் அவரது அடியாட் கள் மீது தற்கொலைக்குத் தூண்டும் வகையில் துன்பு றுத்தியதாக புகார் கொடுத் துள்ளார். புகாரைப் பெற் றுக் கொண்ட போலீசார் இளங்கோவையும் அவரது அடியாட்களையும் தேடி வருவதாக இன்ஸ்பெக்டர் நல்லு தெரிவித்துள்ளார்.இளங்கோ ஆளுங்கட்சி பிரமுகர்கள் என்பதால் அவரை கைது செய்வதில் போலீசார் தயக்கம் காட் டுவதாகக் கூறப்படுகிறது. இளங்கோ இதே பகுதியில் இது போன்று பலரிடம் கந் துவட்டி கொடுத்து அவர் களை ஊரை விட்டே விரட் டியுள்ளதாகக் கூறப்படு கிறது. முத்துவீரனுக்கு சேகர், சதீஸ் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். (ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: