காங்டாக்: சட்டவிரோதமாக கழிவு களைப் பொது இடத்தில் குவிப்பதைத் தவிர்ப்பது மற்றும் அத்தகைய நிறு வனங்களுக்கு எச்சரிக்கை செய்யும் வித மாக சிக்கிம் மாநில வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை ரூ.75 லட்சம் அபராதம் விதித் துள்ளது.எளிதில் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக டீஸ்டா 5ம் நிலைப் பகுதியைச் சுற்றியுள்ள தாவர இனங்களைப் பாதுகாக்குமாறு என்ஹெச்பிசிக்கு வனத்துறை உத்தரவிட் டிருந்தது.
அதன்படி விதிமுறைகளை மீறி கழிவுகளைக் கொட்டிய நிறுவனங் களுக்கு சுமார் 1 கோடி அபராதம் விதிக் கப்பட்டது. அதன் பின்னர், நீதிமன்றத் திற்கு நடந்த சமரசத்தில் அபராதம் ரூ.75 லட்சமாகக் குறைக்கப்பட்டது என்று கூடுதல் முதன்மைச் செயலாளர் எம். சிங் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

Leave A Reply