புதுக்கோட்டை, மார்ச் 1
கறம்பக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை செல் லும் மெயின் சாலையில் சுக்கிரன்விடுதி, தீத்தான் விடுதி பிரிவு சாலையின் அருகில் வேகத்தடை அமைத்து, விபத்துக்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது.சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச் சாமி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதுபற்றி குறிப் பிட்டிருப்பதாவது:புதுக்கோட்டை மாவட் டம், கறம்பக்குடி தாலுகா, தீத்தான்விடுதி ஊராட் சியைச் சேர்ந்த சுக்கிரன் விடுதி, தீத்தான்வடுதி பிரிவு சாலை அருகில் தொடர்ந்து விபத்துக்கள் நடந்த வண் ணம் உள்ளன.
கறம்பக்குடி யிலிருந்து பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி போன்ற பெரு நகரங்களுக்கு செல் லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் சரக்கு லாரி களும், ஏராளமான மோட் டார் சைக்கிள்களும் இந்த சாலையில் குறைந்தபட்சம் 100 கிலோமீட்டர் வேகத் தில் செல்கின்றன. அதனால் விபத்துக்கள் நடந்து பல உயிர்கள் பலியாகியுள்ளன.சமீபத்தில் 30.1.2012ல் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் பலியானதும், 25.2.2012ல் அதே இடத்தில் (சுக்கிரன் விடுதி) பள்ளி சிறுவன் லாரி யில் அடிபட்டு, உடல்கள் சிதைந்துபோனதும், அனை வரின் நெஞ்சை உலுக்கி யது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் சாலையில் செல்ல அச்சப்படும் நிலை உள்ளது. அதேபோல் தீத் தான்விடுதி பிரிவு சாலை யிலும் இதுபோன்ற விபத் துக்கள் அடிக்கடி நடை பெறுகின்றன.எனவே, மாவட்ட ஆட் சித் தலைவர் தனிக்கவனம் செலுத்தி மக்களின் நன்மை யைக் கருதி, சுக்கிரன்விடுதி பஸ் நிறுத்தத்திற்கும், வெள் ளாளக்கொல்லை பஸ் நிறுத்தத்திற்கும் இடையில் இரு வேகத்தடைகள் அமைக் கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கோரிக்கைக் கடிதத்தில் குறிப்பிடப்பட் டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.