பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சிக்கினபோபால்,
மார்ச் 1 – இந்தூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் புரு ஷோத்தம் சோம்குன்வா ரின் இந்தூர் மற்றும் போபால் வீடுகளில் லோக் அயுக்தா காவல்துறை திடீர் சோதனை நடத்தியது. அறி யப்பட்ட அவருடைய வரு மானத்துக்குப் பொருத்தம் இல்லாத வகையில், பல கோடி மதிப்புள்ள சொத் துக்கள் சோதனையில் கைப்பற்றப்பட்டன.புருஷோத்தமிடமிருந்து மூன்று வீடுகள், ஒரு விடுதி, நான்கு கடைகள் ஏழு வீட் டடிமனைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்று இந்தூர் லோக் அயுக்தா காவல்துறை கண் காணிப்பாளர் வீரேந்திர சிங் கூறினார். அசையாச் சொத்துக் கள் தவிர, அவரிடமிருந்த ரொக்கம் ரூ.5.62 லட்சம், மூன்று நான்கு சக்கர வாக னங்களும் ஒரு இரு சக்கர வாகனமும் கைப்பற்றப் பட்டன. வியாழன் காலை யில் இருந்து நடந்து வரும் சோதனையில் இதுவரை கிடைத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.3 கோடி இருக் கும் என்றும் சோதனை கள் முடியும் போது இது உயரக்கூடும் என்றும் கூறப் பட்டது.
கைதி வேட்பாளர் வாக்களிக்கத் தடைபிஜ்னோர்,
மார்ச் 1 – சிறையில் இருக்கும் சமாஜ்வாதி கட்சியின் சந்த் பூர் தொகுதி வேட்பாளரை வாக்களிக்க அனுமதிக்க உள்ளூர் நீதிமன்றம் நிறுத்தி விட்டது. இவர் போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்துக் கொடுத்து மாணவர்களையும் அரசை யும் ஏமாற்றி வந்தவர். அவ ருடைய ஜாமீன் மனு உயர் நீதிமன்றத்தின் விசாரணை யில் உள்ளது. அவர் தேர்த லில் வாக்களிக்க நீதிமன்றத் திடம் அனுமதி கேட்டார். கூடுதல் தலைமை நீதியியல் நீதிபதி ரீட்டா சிங் புதன் கிழமையன்று அனுமதி மறுத்துவிட்டார். நீதிமன் றத்திடம் அனுமதி பெற்ற பின்பே இவர் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
மாலத்தீவு கடற்படை இந்திய மீனவர்களைப் பிடித்தது
சென்னை, மார்ச் 1 – மாலத்தீவு கடற்படை பதினோரு இந்திய மீனவர் களைச் சிறை பிடித்துள் ளது. சர்வதேச கடல் எல் லையை இவர்கள் தாண்டி னார்கள் என்று மாலத்தீவு கடற்படை அதிகாரிகள் கூறுகின்றனர்.பிடிபட்ட மீனவர்கள் அனைவரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் என்றும், பிரச்சனை குறித்து மாவட்ட நிர்வாகம் தீவிரமாகப் பரிசீலித்து வரு கிறது என்றும் மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் தெரிவித்தார். மீனவர்கள் கடந்த வாரத்தில் கேரளா கடற்கரையில் இருந்து மீன்பி டிக்கச் சென்றனர். பிப்ரவரி 25 அன்று அவர்கள் திரும்பி வந்திருக்க வேண் டும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
லாலு மீது குற்றச்சாட்டு பதிவுபாட்னா,
மார்ச் 1 – பலகோடி ரூபாய் மோசடி நடந்த கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற் றம்சாட்டப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர்கள் லாலுபிரசாத், ஜகன்னாத் மிஸ்ரா, ஐக்கிய ஜனதா தள எம்.பி. ஜகதீஷ் சர்மா உள் ளிட்ட மூவர் மீது சிபிஐ நீதிமன்றம் குற்றச்சாட்டு களை பதிவு செய்தது. இவர்களுடன் ஆர்ஜேடி முன்னாள் எம்.பி. ஆர்.கே. ராணா மீதும் குற்றப்பதிவு செய்யப்பட்டது.1994-96 ஆண்டுகள் காலக்கட்டத்தில் போலி பில்கள் மூலம் பங்கா, பகல் பூர் அரசு கருவூலங்களில் இருந்து ரூ.46 லட்சம் பணத்தை மாநில கால்ந டைத்துறை அதிகாரி மோசடியாக எடுத்தார் என்று சிபிஐ குற்றம்சாட் டியது. அக்காலகட்டத்தில் லாலுபிரசாத் பீகார் முதல் வராக இருந்தார். தன்னை விசாரணைக்குட்படுத்த ஆளுநரின் அனுமதியை சிபிஐ பெறவில்லை எ

Leave A Reply

%d bloggers like this: