பாரிஸ், மார்ச் 1 – தங்களின் தவறான முத லாளித்துவப் பொருளாதா ரக் கொள்கைகளின் விளை வாக ஏற்பட்ட சீரழிவை மக்கள் தலைமேல் சுமத்தும் ஐரோப்பிய ஆட்சியாளர்க ளின் நடவடிக்கைகளுக்கு எதிராக மீண்டும் பெரும் போராட்டங்கள் வெடித் துள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு நெருக்கடியை யும், அதே நேரத்தில் அத் தனை நெருக்கடிகளையும் மக்கள் மேல் சுமத்தும் ஆட் சியாளர்களின் போக்கை யும் எதிர்த்து செக் குடியரசு, பிரான்ஸ், கிரீஸ், பெல்ஜி யம் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பெருந்தி ரள் ஆர்ப்பாட்டங்கள் நடந் திருக்கின்றன. பெல்ஜியத் தின் தலைநகர் பிரஸ்ஸல் சில் உள்ள ஐரோப்பிய கவுன்சில் அலுவலகத்திற்கு முன்பாகக் கூடிய தொழிலா ளர்கள் சிக்கன நடவடிக்கை கள் என்ற பெயரில் மக்கள் மீது சுமத்தப்படும் சுமை களை அகற்றுமாறு கோரிக் கை வைத்தனர்.வழக்கம்போலவே, சீர்திருத்தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் அவசி யம். கல்வித்தரத்தை மேம் படுத்தவும், கூடுதல் நிதி கிடைக்கவும் மக்கள் மீது சுமையை ஏற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று செக் குடியரசின் ஆட்சியாளர்கள் கூறியிருக் கிறார்கள். தலைநகர் பிரேக் கில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற பெரும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், வேலையிழந்தவர்கள் என்று பல பிரிவினரும் கலந்து கொண்டனர்.பிரான்சில், அந்நாட் டின் அனைத்து முக்கிய சங் கங்களும் விடுத்த அறை கூவலை ஏற்று நாடு முழுவ தும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. பிரான்சில் மட்டு மல்லாது, ஒட்டுமொத்த ஐரோப்பிய யூனியனில் நடைமுறைப்படுத்தப்படும் மக்கள் விரோத நடவடிக் கைகளுக்கு எதிராக இவர் கள் குரல் கொடுத்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றனர்.கிரீசில், புதிதாகக் கடன் வாங்குவதற்காக திட்ட மொன்றை உருவாக்கி நாடாளுமன்றத்தில் ஒப் புதலும் வாங்கியுள்ளார்கள் ஆட்சியாளர்கள். இதற்கு எதிராக ஏதென்ஸ் உள் ளிட்ட நகரங்களில் பெருந் திரள் பேரணிகளை நடத்து மாறு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. இதை ஏற்று லட்சக்கணக் கான தொழிலாளர்கள் எதிர்ப்புப் பேரணிகளில் கலந்து கொண்டனர்.மாணவர்கள் மீது அடக்குமுறைஸ்பெயினின் பார்சி லோனா நகரில் கல்விக்கான நிதி வெட்டுவதை எதிர்த்து மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க காவல்துறையினர் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். அந்நகரின் பங்குச்சந்தைக்கு எதிரில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்தினர். கலவரத்தை அடக் கும் காவல்துறையை அந்த மாணவர்கள் மீது ஆட்சியா ளர்கள் ஏவிவிட் டனர். காவல்துறையின் நட வடிக்கையால் தாக்கப்பட்ட மாணவர் ஒருவர், இந்த அளவுக்கு ஒடுக்குமுறை இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நிர்வா கம் சொல்வது போன்று மாணவர்கள் எந்தவித வன் முறைச் செயல்களிலும் ஈடு படவில்லை. வன்முறையில் மாணவர்கள் ஈடுபட்டார் கள் என்பது பொய்யான செய்தியாகும் என்றார்.2010 ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஐரோப்பிய யூனியனில் பல நாடுகள் பொருளாதார நெருக்கடி யில் சிக்கின. தொடர்ந்து சரி வைச் சந்தித்து வருவதால் கிரீஸ், போர்ச்சுக்கல் போன்ற நாடுகள் யூரோ மண்டலத்திலிருந்து வெளி யேறுவது பற்றி ஆலோ சித்து வருகின்றன.

Leave A Reply

%d bloggers like this: