கோவை, மார்ச்,1-
இந்தியாவின் முதன்மை ஆயுள்காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, ஜீவன் விருத்தி என்ற புதிய பாலிசியை அறிமுகப்படுத்தி உள்ளது.எல்ஐசியின் கோவை கோட்டத்தின் முதுநிலை கோட்ட மேலாளர் கே.ஜி.சோமசுந்தரம் புதிய பாலிசியான ஜீவன் விருத்தியை கோவையில் வியாழனன்று அறிமுகப்படுத்தினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி எப்போதுமே பெருவாரியான மக்களின் நிதி தேவைகளை உணர்ந்து. அவற்றை நிறைவடையச் செய்யும் வகையில் பாலிசிகளை வழங்கி வருகிறது. மேலும், எதிர்வரும் பொருளாதார சூழல்களை கருத்தில் கொண்டும், மக்களின் சேமிப்புகள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் கவனத்துடன் செயல்படுகிறது. அந்த வகையில் தற்போது. ஜீவன் விருத்தி என்ற புதிய பாலிசியை அறிமுகப்படுத்தி உள்ளோம். இப்பாலிசி ஒரே தவணையில் செலுத்தக்கூடியது. குறைந்தபட்ச பிரிமியம் ரூ.30 ஆயிரம் ஆகும். இத்திட்டத்திற்கு முதிர்வு காலம் 10 ஆண்டுகள், இறப்பு காப்பீட்டுத் தொகை பிரிமியத் தொகையைப் போல் 5 முறை கிடைக்க கூடியதாகும். 8 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டம் அதிக பட்சம் 120 நாட்கள் வரை இருக்கும். மேலும். உத்தரவாதமான முதிர்வுத் தொகையும் முதலீட்டுப் பலனும் ஒருங்கிணைந்த தன்மை என்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் வணிக மேலாளர் வி.ஆ.கண்ணன், முதன்மை மேலாளர் ஆர்.சீனிவாசன், பல்வேறு துறைகளின் மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: