கூட்டுறவு இயக்கம் தொடங்கப்பட்டு 105ஆண்டுகள் கடந்துவிட்டன. கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்ட கூட் டுறவு அமைப்புகள் பாதுகாக்கப்பட வேண் டும் என்பதை மக்களிடையே பெரும் விழி ப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
மக்கள் கூடி வாழும் பண்புடையவர்கள் என்ற எண்ணம் தோன்றிய நாள் முதல் கூட் டுறவும் இருந்து வருகிறது. “எல்லோரும் ஒவ்வொருவருக்காகவும் ஒவ்வொருவரும் எல்லோருக்காகவும்” என்பதே அதன் குறிக்கோள்.கூட்டுறவு பல அடுக்குமுறை கொண்ட அமைப்பு (2 கூசைந ளுலளவநஅ/3 கூசைந ளுலளவநஅ) அதன் ஒரு பிரிவுதான் தொடக்க கூட்டுறவுகள், அதில் பணியாளர்கள் கூட்டுறவும் அடக்கம்.
அந்த வகையில் போக்குவரத்துத் தொழி லாளர்களுக்கென 1957ல் தொடங்கப்பட்ட கூட்டுறவு கடன் சங்கம்தான் சென்னை தேனாம்பேட்டை போக்குவரத்து கடன் சொசைட்டி (போக்குவரத்துக் கழக பணி யாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு கடன் சங்கம் – 367)அதன் வளர்ச்சியில் உறுப்பினர்கள் மற் றும் பணியாளர்கள் பங்களிப்பு என்பது எல் லோருக்கும் தெரிந்த ஒன்று. முன்பெல்லாம் தொழிலாளர்களின் (அங்கத்தினர்களின்) அவசர அத்தியாவசிய தேவைக்கு சொசைட்டி எந்த அளவில் பயன்பட்டு வந்துள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விசயம். ஆனால் தற்போது சொசைட்டி நிலைமை என்ன?
சொசைட்டியில் அத்தியாவசிய பணியில் தள்ளாட்டம் ஏன்? போன்ற கேள் விகள் இன்று எழுகிறது.சென்னை தேனாம்பேட்டை சொசைட்டி யானது 14.5.1957ல் பதிவு செய்யப்பட்டு, 25.5.1957ல் முன்னாள் தமிழக முதல்வராக இருந்த சர்.இராஜ கோபாலாச்சாரியார் அவர் களால் ஆரம்பிக்கப்பட்ட பழம்பெருமை வாய்ந்த சங்கமாகும். அந்த காலங்களில் தமிழ் நாடு அரசு நடத்திய போக்குவரத்துக் கழகங் களைச் சார்ந்த தொழிலாளர்களாக சேரலாம் என்ற கோட்பாட்டோடு ஆரம்பிக்கப்பட்ட இக் கூட்டுறவு கடன் சங்கம் நாளடைவில் மாறிய காலச் சூழலுக்கேற்ப தற்பொழுது மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக்கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், திருவள்ளூர் ஆகிய கோட்டங்களோடு சாலை போக்குவரத்து நிறுவனம், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிறுவனம், பல்லவன் கன்சல்டன்சி உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து வகையான பணி யாளர்களை உறுப்பினராக கொண்டு செயல் பட்டு வருகிறது.
அன்றைய நாளில் கூட்டுறவு அமைப்புகள் சுதந்திரமாகவும் ஜனநாயக ரீதியாகவும் செயல்படவேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட பின்னணியில் சுமார் 34 ஆண்டுகளுக்கு பின்னர் கூட்டுறவு அமைப் புகளுக்கென தேர்தல் நடத்தப்பட்டபொழுது சிஐடியு சங்கம் முதன்முதலாக 1990ம் ஆண் டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழுவாக சொசைட்டிக்கு பொறுப்புக்கு வந்தது. சில மாதங்களே பொறுப்பில் இருந்த சிஐடியு செய்த சாதனைகள் என்பது விவரிக்க இயலாதது.தோழர் எம்.சந்திரன் தலைமையில் அமைந்த நிர்வாகக்குழுவானது தனது முதல் பணியாக கடன் சங்கத்திற்கு சொந்தக் கட்டிடம் இல் லாத நிலையில் ஒரு நிரந்தர சொந்தக் கட் டிடம் வாங்குவது என முடிவு எடுத்து, எந்த வித ஊழலுக்கும் இடம் கொடாமல் மத்திய அரசின் வருமான வரித்துறை மூலம் நடை பெற்ற ஏலத்தில் 25 லட்சத்து இரண்டாயிரம் ரூபாய்க்கு தற்பொழுதுள்ள கட்டிடத்தை வாங் கியுள்ளோம்.கடனுக்கு வசூலிக்கப்பட்ட இரட்டை வட்டி முறை நீக்கப்பட்டது.
தேவையற்ற விதத்தில் பணிநீக்கம் செய் யப்பட்ட 8 பணியாளர்கள் தொழிலாளர் துறை யின் உதவியோடு மீண்டும் பணியமர்த்தப்பட்டனர்.மீண்டும் இரண்டாவது முறையாக 5.5.1997ல் தோழர் ஏ.பி.அன்பழகன் தலை மையில் 14 இயக்குனர்கள் கொண்ட குழு அங்கத்தினர்கள் அன்பான வாக்குகள் மூலம் பொறுப்பேற்றது. அப்பொழுது சிஐடியு செய்த பணிகளில் சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.நான்கு மாதத்திற்கு ஒரு முறை என்ற ஒருங்கிணைப்புக் கடனை மூன்று மாதத் திற்கு ஒரு முறை என மாற்றம் செய்தது.கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் இறந்தால் வாரிசுகளுக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதியுதவி ரூ.15,000 என்று இருந் ததை ரூ.30,000, ரூ.40,000, ரூ.50,000 என்ற முறையில் கிடைக்க வழிவகை செய்தது.மாறிவரும் நவீன சூழலுக்கேற்ப கணினி பயன்பாட்டை கொண்டுவந்தது.
போக்குவரத்து கழகங்கள் பிடித்தம் செய்த தொகையை சம்பந்தப்பட்ட நிர்வாகங் கள் சொசைட்டிக்கு செலுத்தாத பொழுது ஜன நாயக ரீதியான இயக்கங்கள் மூலமாகவும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்து, தொகையினை வட்டியுடன் செலுத்த நீதி மன்ற தீர்ப்பு பெறப்பட்டது.மே 2001ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சிப்பொறுப்பு ஏற்ற வுடன் முதன்முறையாக மாநிலம் முழுவதும் கூட்டுறவு அமைப்புகளில் ஜனநாயக பூர்வ மாக நடைபெற்ற தேர்தல் மூலம் தேர்வு செய் யப்பட்ட நிர்வாகக் குழுக்களை கலைத்து, கூட்டுறவு அமைப்புகளை தனி அதிகாரிகள் கையில் ஒப்படைக்க முடிவு எடுத்தது.ஆனால் இன்றைய நிலை என்ன?சொசைட்டியில் கடன் கோரி ஒரு உறுப் பினர் கடன் மனு விண்ணப்பித்தால் அதிகபட் சம் அம்மாதம் 15ம் தேதிக்குள் காசோலை வழங்கப்பட்டு விடும் என்று தான் கேள் விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் இன்று?கடன் வழங்கும் தேதி, போக்குவரத்து கழ கங்களிடமிருந்து பிடித்தம் செய்த தொகை கிடைக்கப் பெற்ற பின்னர் அறிவிக்கப்படும் என்றோ அல்லது “சென்னை மத்திய கூட் டுறவு வங்கியில் எதிர்பார்ப்பு கடன் (ஹபயiளேவ டுடியn) கிடைத்த பிறகு தேதி பின்னர் அறிவிக் கப்படும்” என்றோ சுற்றறிக்கையின் மூலம் தெரிவிக்கப்படுகிற சூழ்நிலை.இந்த தள்ளாட்ட நிலைமைக்கு காரணம், சொசைட்டிக்கு தவணை தவறிய மற்றும் வாராக்கடனாகவும் இருக்கும் தொகை எவ் வளவு தெரியுமா? சுமார் ரூ.50 கோடி. வசூல் நடவடிக்கை ‘0’ நாம் அறிந்தவகையில்.இவ்வாறு தவணை தவறிய கடன் அதிகம் ஏற்படக் காரணம், தகுதிக்கு மீறி (சட்டவிதி களை மீறி) கடன் வழங்கப்பட்டதுதான் கார ணம் என கேள்விப்படுகின்றோம்.சொசைட்டிக்கு வரவேண்டிய தொகை அதாவது போக்குவரத்து கழக நிர்வாகங்களி லிருந்து கடன் சங்கத்திற்கென உறுப்பினர் களிடம் பிடித்தம் செய்த தொகை ரூ.19 கோடி அளவிற்கு இன்றைய நாளில் நிலுவை உள் ளதாக அறிகின்றோம்.
கழக நிர்வாகங்களை நாடினால், நிலுவை ஒன்றும் கடந்த காலங்களைப் போல அதிக மில்லை; உடனே சரி செய்யப்படும் என்ற தக வல்கள் கிடைக்கிறது. சொசைட்டியோ ஊடிசயீடிசயவiடிn ஊடிடடநஉவiடிn வரவில்லை. அதிக அள வில் இரண்டு மூன்று மாதமாக பணம் தர வில்லை என்கிறது. உதாரணமாக, ஆகூஊ நிர் வாகத்திற்கு 10 கோடி அளவிற்கு பிரதிமாதம் னுநஅயனே போட்டால் 4 கோடி அளவிற்கு தான் பிடித்தம் ஏற்படுத்தப்படுகிறது என்ற தக வலையும் கேள்விப்படுகிறோம்.கூட்டுறவுத் தேர்தல்தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பதவி ஏற்றவுடன் 2006 ஆகஸ்ட் திங்க ளில் நடைபெற்ற கூட்டுறவு மானியக் கோரிக் கையின் பொழுது கூட்டுறவு சங்கங்களுக்கு என கூட்டுறவு சங்கங்கள் சுயமாக செயல்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட் டது.
அதிலும் கூட்டுறவுத் தேர்தல் தொடர் பாக சட்டரீதியான விசயங்கள் ஏதேனும் இருப் பின் அவைகள் திரும்பப் பெறப்படும் என்றும் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலில் வாக்களிக்கும் உரிமை, தேர்தலில் போட்டி யிடும் உரிமை ஆகிய இரண்டும் 25.5.2001க்கு முன்னர் சேர்ந்த உறுப்பினர்களுக்கு மட் டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடத் தப்படும் என அட்டவணை மூலம் அறிவிக் கப்பட்ட தேர்தல், முதல் இரண்டு நிலை யிலே ஆளுங்கட்சியினரால் அராஜகம் கட்ட விழ்த்துவிடப்பட்டு தேர்தலை ஜனநாயக படுகொலை செய்தனர் என்றே கூறலாம். ஆளும் கூட்டணிக் கட்சிகள்கூட இந்த முறைகேடுகளை கண்டித்து போராட்டம் நடத்தியது. இதனால் அன்றைய தமிழக அர சானது நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து விட்டு, தொடர்ந்து தேர்தல் ஆணையம் மூலம் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் இன்று வரை காற்றில் பறக்க விடப்பட்ட நிலையிலே உள்ளது.இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆறு மாத காலத்தில் சட்டசபை கூட்டத்தில் தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப் படுகிறது.கடைசியாக கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பொழுது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் தோழர் அ.சவுந்தரராசன் பேசும்பொழுதுகூட, இதுவே கடைசி முறையாக இருக்கவேண் டும் எனவும் விரைவில் கூட்டுறவு சங்கங் களுக்கென தேர்தல் நடத்தவேண்டும் என வும் கேட்டுக்கொண்டார்.அந்த கோரிக்கை நிறைவேறும் பொருட்டு கூட்டுறவுகளில் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டுமென்றால் தனியான தேர்தல் ஆணையம் மூலம் புகைப்பட வாக்காளர் அட் டையுடன் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அபபொழுதுதான் கூட்டுறவு சங்கங்களில் தேவையற்ற அரசியல் இருக்காது.
இது போன்ற முறைகேடுகள் நடக்காது என நம்பு கிறோம். போக்குவரத்து சொசைட்டியில் நடைபெற்ற முறைகேடுகளை ஆய்வு செய்து களையவும், கடன் சங்கம் சீரான பாதையில் பயணிக்கவும், கூட்டுறவுத் துறையும் தமிழக அரசும் உடன் தலையிட வேண்டும்.“உயிருள்ள இயக்கம் கூட்டுறவு இயக்கம். அதற்கு சில சோதனைகள் ஏற்படுகின்றன. அதன் தத்துவமும் குறிக்கோளும் என்னைக் கவர்ந்தன. தனிமனித சுதந்திரம், பாதுகாப்பு, செல்வ வேட்டை சமுதாயத்தில் தப்புவது என்று இரண்டு கோட்பாட்டிலிருந்து தாண்டி வாழ்வதற்கு தத்துவத்தையும், வழிமுறை யையும் கூட்டுறவு இயக்கம் காட்டுகிறது. கூட்டுறவை தவிர வேறு திருப்திகரமான முறை எனக்குப் புலப்படவில்லை”
– பண்டித ஜவஹர்லால் நேரு

Leave a Reply

You must be logged in to post a comment.