காஞ்சிபுரம், மார்ச், 1 -இலப்பை கண்டிகை முஸ்லீம் மக்கள் காலம், காலமாக பயன்படுத்தி வரும் சாலையை பொது பாதையாக அறிவித்து, அம்மக்களுக்குள் ஏற்படும் மோதலை தடுத்து உடனடி யாக சாலை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத் தப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட் டம், வாலாஜாபாத் ஒன்றி யத்திற்குட்பட்டது வளத் தூர் ஊராட்சி. வளத்தூர் ஊராட்சியில் 150க்கும் மேற் பட்ட முஸ்லீம் மக்கள் வசிக்கும் இலப்பை கண் டிகை என்ற பகுதி உள்ளது. வளத்தூர் மெயின் சாலை யில் இருந்து, இலப்பை கண்டிகை கிராமத்திற்கு செல்லும் சாலை ஒன்றை இம்மக்கள் 200 ஆண்டுக ளுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலை யில் சாலையின் ஒரு பகுதி (மாலிக்பாட்ஷா என்பவர்) தன் நிலத்திற்கு சொந்தமான தென (பிப். 25) ஞாயிறன்று சாலையின் குறுக்கே கல்லை நட்டு, வழி தடை செய்து சில ஆட்களை கொண்டு ஆக்கிரமிப்பு செய் துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இலப்பை கண் டிகை முஸ்லீம் மக்களுக் கும் மாலிக் பாட்ஷா தரப் பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இம்மோத லில் அனிபா, சகாப்தின், பாபுசார் உள்ளிட்ட (இலப்பை கண்டிகை பகுதி மக்கள்) காயமுற்று மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 10க்கும் மேற் பட்ட இலப்பை கண்டிகை முஸ்லீம் மக்கள் கைது செய் யப்பட்டு சிறையில் உள்ள னர்.இதற்கிடையே இப் பிரச்சனை குறித்து தகவல றிந்து சிபிஎம் சார்பில் ஒரு குழு இலப்பை கண்டிகை பகுதிக்கு நேரடியாக சென்று பார்வையிட்டனர்.சிபிஎம் காஞ்சிபுரம் வட்டச் செயலாளர் எம். ஆறுமுகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே. நேரு, தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலா ளர் சி.பாஸ்கரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட் டச் செயலாளர் சி.சங்கர் ஆகியோர் அடங்கிய இக் குழு பிரச்சனை குறித்து அம் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.இலப்பை கண்டிகை முஸ்லீம் மக்கள் செய் கின்ற பாய் நெசவுத் தொழி லுக்கு தேவையான கொள் முதல் பொருட்கள் கரூர் மற் றும் திருச்சி போன்ற இடங் களில் இருந்து லாரி மூலம் இலப்பை கண்டிகை வந்த டைகிறது. தனிநபர் சொந்த மென கூறும் நிலம் சாலை பகுதியில் உள்ளதால் இப் பிரச்சனையில் மாவட்ட ஆட்சி நிர்வாகமும், காவல் துறையும் தலையிட்டு அந் நிலத்தை அரசு பெற்று பொது பாதைக்கு பயன் படுத்தும் வகையில் அம்மக் களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இப்பிரச்சனையில் 2 தரப்பினர் மீதும் தொடுக் கப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இவ்வழக்கில் காவல் துறையினர் பாரபட் சமின்றி விசாரணை நடத்தி, ஆர்டிஓ விசாரணையை யும் துரிதப்படுத்தி பேச்சு வார்த்தை மூலம் உடனடி யாக தீர்வு காண வேண்டும். 150க்கும் மேற்பட்ட முஸ் லீம் குடும்பங்கள் உள்ள இலப்பை கண்டிகை பகுதி யில் அம்மக்கள் தொழி லுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் லாரி உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் செல் லும் வகையில் சாலை வசதி ஏற்படுத்தித் தந்து அம்மக் களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென சிபிஎம் சார்பில் வலியு றுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.