திருப்பூர், மார்ச் 1-
திருப்பூர் ஆலுக்காஸ் நகைக் கடையில் ரூ.12 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளைக் கும்பலைப் பிடித்துவிடுவோம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஆலுக்காஸ் நகைக் கடையில் ஜன்னல் கம்பிகளை கேஸ்வெல்டிங் மூலம் வெட்டி உள்ளே புகுந்த கொள்ளைக் கும்பல் ரூ.12 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது. கடந்த பிப்ரவரி 20ம் தேதி நள்ளிரவுக்கு மேல் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் பிப்ரவரி 21ம் தேதி காலை கடை ஊழியர்கள் கடையைத் திறந்தபோது தெரிய வந்தது.கொள்ளை நடந்த கடைக்கு வந்து பார்வையிட்ட காவல் துறையினர், இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இதுவரை துப்புத் துலங்கவில்லை என்றே காவல்துறை வட்டாரத்தினர் கூறிவருகின்றனர். இச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வடமாநிலக் கொள்ளையர்களாக இருப்பார்கள் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அத்தோடு திருப்பூரை மையப்படுத்தியும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில் வியாழனன்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வே.பாலகிருஷ்ணன் கூறுகையில், “இதுவரை இக்கொள்ளைச் சம்பவ விசாரணையில் முன்னேற்றம் இல்லை. எனினும் நிச்சயம் இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் பிடித்துவிடுவோம்.” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: