வரலாறு என்பது மனிதர்களின் கடந்த காலங்கள் மட்டுமல்ல. சமூகத் தின் இயக்க முறை, அந்த காலகட்டத் தில் வாழ்ந்த உயிரினங்கள், நிலம், மலை, ஆறு உள்ளிட்ட அனைத்தையும் உள்ள டக்கியதே ஆகும். உலகத்தில் நடத்தப் பட்ட அகழ்வாய்வுகள், கல்வெட்டுக்கள், புராதான பொருட்கள் ஆகியவற்றின் மூலம்,மனித குலத்தின் வரலாறு, நாக ரிகம் ஆகியவற்றைப் பற்றி எராளமான விஷயங்களை நாம் அறிந்து கொண்டுள் ளோம்.
ஆனாலும் இன்னமும் அறியப் படாத பல தகவல்கள் மண்ணில் புதை யுண்டு கிடக்கின்றன. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் அவை கள் முறையாக பாதுகாக்கப் படாததால் பல தொன்மையான வரலாற்று சின் னங்கள் அழியும் தருவாய்க்கு சென்று கொண்டுள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை சேர, சோழ, பாண்டிய பேரரசர்களே பெரும் பாலும் வரலாற்று நாயகர்களாக அதிக மாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதற்கும் பண்டைய காலகட்டத்தில் படைவீரர்களாகவும், பொருள் உற்பத்தி யில் ஈடுபட்டு வந்தவர்களாகவும், இனக் குழு தலைவர்களாகவும் வாழ்ந்த பலர், சிறிய குழுக்களை தங்கள் ஆதிக்கத் திற்குள் கொண்டுவரத்துடித்த ஏகாதிபத் தியத்தை எதிர்த்து போராடிய வீரம் செறிந்த வரலாறுகள் வெளிப்படாமல் உள்ளது என்றால் அது மிகையல்ல.
மலைக்காடுகளும், குன்றுகளும் நிறைந்த திருவண்ணாமலை மாவட் டத்தை சுற்றி அத்தகைய வரலாறுகள் வெளிப்பட்ட போதிலும், தொல்லியல் துறை மூலம் அவை அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு ஆவனப்படுத்தும் முயற்சி எடுக்கப்படாததால் அந்த வரலாற்றுச் சின்னங்கள், கல் உடைப்பு, நில விஸ் தீரணம் மற்றும் ரியல் எஸ்டேட் உள் ளிட்ட தொழில்கள் மூலம் விரைவில் அழி யும் தருவாய்க்கு சென்று கொண்டுள்ளது. தமிழக அகழ்வாராய்ச்சிகளில் சுமார் கி.மு 1000 ஆண்டுகளுக்கும் முன்னர் வாழ்ந்த மனிதர்கள் குறித்த பல அடை யாளங்கள் ஆதிச்சநல்லூர் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
கி.மு 2500 ஆண் டான புதிய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் ஆற்றங் கரையோரங்களை ஒட்டிய சிறிய மலையடிவாரங்களின் அடர்த்தியில் லாத காடுகளில் வாழ்ந்துள்ளனர். மேய்ச் சல் காரணங்களுக்காக அவ்வப்போது இடம் பெயர்ந்த அந்த மனிதர்கள் வாழ்ந்த அடையாளங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் காணக் கிடைக்கின்றன.சமீப வரலாற்று காலத்தில் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்ட திரு வண்ணாமலை மாவட்டத்தில் தென் பெண்ணையின் உப ஆறுகளான ஆழி யாறு, பாம்பாறு, வறட்டாறு ஆகிய ஆற்றங் கரையோரங்களிலும், தண்டராம்பட்டு தாலுக்காவில் உள்ள சாத்தனூர் நீர் தேக்கம், மேல்பாச்சார், மயிலாடும் பாறை, டி.மோட்டூர், வீரணம், போந்தை, நாரா யண குப்பம் ஆகிய பகுதிகளில் கல் திட் டைகள் என்று சொல்லப்படுகின்ற பெருங் கற்களாலான புதை கள கல்லறைகள் காணப்படுகின்றன.
இத்தகைய அமைப்பு கள் இறந்தவர்களின் புதை குழிகளின் மேல் அமைக்கப்பட்டுள்ளன.புதிய கற்காலம், செம்புக்காலம், இரும்புக்காலம் மற்றும் வெண்கலக் காலங்களில் தொடர்ந்து இத்தகைய அமைப்புகள் அமைக்கப்பட்டு வந்துள்ள தாகவும் கூறப்படுகிறது. 1 முதல் 3 மீட்டர் சுற்றளவுள்ள உருண்டை கற்கள் வட்ட வடிவில் அடுக்கப்பட்டு அதன் நடுவில் செவ்வக வடிவிலான பலகை கற்கள் நடப்பட்டுள்ளன. இந்த கல் திட்டை களுக்கு உள்ளே பெரிய மண் கலங்களில் அக்கால மணிதர்களின் எலும்புக்கூடு கள், அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த மண்பாண்டங்கள், தானியங் கள், உள்ளிட்ட பொருட்கள் காணப்படு கின்றன. மேலும் இரும்பு, செம்பு ஆகிய உலோகங்களையும் அந்த மனிதர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள பகுதியில் ஆதி மனிதர்கள் பெருங்கற்களால் தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ள தும் புலனாகிறது. மேலும், அக்காலத்தில் தொழில் மேம்பாடு, விவசாயம் , வாழ்க்கை முறை நிர்வாகம் ஆகியவற்றில் மணிதர்கள் மிகுந்த கவனத்துடன் விளங்கியதற்கான ஆதாரங்களும் தெரிய வருகின்றன. சில ஆண்களுக்கு முன்பு திரு வண்ணாமலை அடுத்த சம்மந்தனூரில் 3 ம் நூற்றாண்டை சேர்ந்த கல் திட்டை கல்லறை ஒன்று கண்டு பிடிக்கப்பட் டது.
அந்த கல்லறையில் அடக்கம் செய் யப்பட்ட மனித உடல் அந்த பகுதியில் வாழ்ந்த ஒரு இனக்குழு தலைவரின் உட லாக இருக்கலாம் என்று ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த கல் லறையிலிருந்து கருப்பு மற்றும் சிகப்பு வண்ணம் பூசப்பட்ட மண் பாண்டங்கள், நுண்ணிய வேலைப்பாடுகளுடன் அமைந்த தண்ணீர் கூஜா உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. போரில் வீழ்ந்தவன், ஊருகாத்த வன், களவில் தேர்ந்தவன் உள்ளிட்ட வீரத் தின் அடையாளங்களாக விளங்கியவர் களை இப்படி அடக்கம் செய்வது அக் கால மரபு என்றும் ஒரு குறிப்பு தெரி விக்கிறது.
மேலும் இந்த பெருங்கற்கால சின்னங்கள் காணப்படும் இடங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் 2800 ஆண்டு களுக்கு முந்தய தமிழ் – பிராமி எழுத்துக் கள் அடங்கிய கல்வெட்டுக்களும், நடு கற்களும் காணப்படுகின்றன.முன்னதாக மதுரை அருகே உள்ள வெள்ளரிப்பட்டியில் இது போன்ற நூற்றுக் கணக்கான தொல் கல்லறைகள் ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ்களால் சேதப் படுத்தப்பட்டுள்ளது என்பதை இங்கே நாம் நினைவில் கொள்ளப்பட வேண் டும். நீண்ட காலமாக தொல்லியல், கல் வெட்டு ஆராய்ச்சியாளர்களை ஊக்கப்ப டுத்த தமிழக அரசும், மத்திய அரசும் தவறி விட்டது. பன்னாட்டு தொழில் மற்றும் வணிக வளர்ச்சிக்கு நம் நாட்டில் தரப் படும் முக்கியத்துவம் கூட, அதனி னும் மேம்பட்ட நமது ஆதி நாகரிகத்தின் எச் சங்களை காப்பதற்கு தரப்பட வில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர் திரு வண்ணாமலை மாவட்ட மக்கள்.
-ஜெ.எஸ்.கண்ணன்

Leave A Reply

%d bloggers like this: