திருவாரூர், மார்ச் 1-
திருவாரூர் மாவட் டத்தில் நடைபெறவுள்ள 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை சிறப்பாக நடத்துதல் குறித்து, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.நட ராசன் தலைமையில் ஜி.ஆர். எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்த தாவது:ஒவ்வொரு மாணவனும் அமைதியாக தேர்வு எழு திடும் வகையில் சிறப்பாக தேர்வுகளை நடத்திட வேண்டும். அதற்குரிய அடிப்படை வசதிகளை நேர்த்தியாக செய்திட வேண்டும். தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடு படுவதை தடுத்திடும் வகை யில், வருவாய்த்துறை மற் றும் கல்வித்துறை அலு வலர்களைக் கொண்டு பறக் கும்படை அமைத்து ஒழுங்கு படுத்திட வேண்டும்.
அனைத்து ஆசிரியர் களும் ஒன்றிணைந்து செயல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி களும் 100 சதவீத தேர்ச்சி மற்றும் மாநில அளவில் அதிக மதிப்பெண்களை மாணவ-மாணவியர் பெற்று முதல் இடங்களை பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலு வலர் மா.சுப்பிரமணியன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தாமஸ்துரை மற்றும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.