திருவண்ணாமலை, மார்ச்.1-
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அநா தையாக விட்டுச் சென்ற பெண் குழந்தையை தொண்டு நிறுவனத்திடம் மாவட்ட ஆட்சியர் அன் சுல் மிஸ்ரா ஒப்ப டைத்தார்.திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கடந்த 18ந்தேதி ஒரு கர்ப் பிணி பெண் பிரசவத்துக் காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை யின் உட லில் எந்தக் குறை பாடுகளும் இல்லை. இந்நிலையில் 19ந் தேதி மாலை, தான் பெற்ற குழந்தையை மருத்துவம னையிலேயே விட்டு விட்டு அந்தப் பெண் மாயமானார்.இதுகுறித்து, மருத்துவ மனை நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் கொடுத் தனர். காவல்துறையினர் அந் தப் பெண் கொடுத்த முகவரி யில் விசாரித்தபோது, அவர் கொடுத்தது போலியான முகவரி என்பது தெரிய வந்தது.இதையடுத்து, அக்குழந் தையை குழந்தை கள் நல மருத்துவர் லட்சுமணன் தலைமை யிலான மருத்து வர்கள் மருத்துவமனையில் புதிதாகத் தொடங்கப்பட் டுள்ள பச்சிளம் குழந்தை கள் பராமரிப்பு சிறப்புப் பிரி வில் சேர்த்து இன்குபேட் டர் கருவி மூலம் சிகிச்சை அளித்து வந்தனர். குழந்தையின் உடல் நலம் தேறியதையடுத்து, (பிப்.28) அன்று அக்குழந் தையைச் சேலத்தைச் சேர்ந்த லைஃப் லைன் என்ற தொண்டு நிறுவனத் திடம் ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா ஒப் படைத்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.