சென்னை, பிப். 29-
இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் முதன் முதலாக நடைபெற உள்ளது. மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இந்தியன், மாநில பாடத்திட்டங்கள் மாற்றப் பட்டு பொதுப்பாடத் திட் டத்தின் கீழ் தேர்வு நடை பெற இருக்கிறது. பொதுத் தேர்வு எழுதும் மாணவர் களுக்கு உதவும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பெற் றோர்-ஆசிரியர் கழகம் மூலம் மாதிரி வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு அவை புத்தகமாக மாணவர்க ளுக்கு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு சமச்சீர் கல்வி அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதன் காரண மாக மாதிரி வினாத்தாள் கள் தயாரிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. இந்த தாமதத் தால் மாணவர்கள் பாதிக்கப் படக்கூடாது என்பதற்காக இந்த புத்தகங்கள் அடங்கிய சி.டி.க்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டன.மாதிரி வினா புத்தகங் கள் எப்போது கிடைக்கும் என மாணவர்கள் எதிர் பார்த்திருந்தனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 4-ந்தேதி தொடங்க இருக்கும் நிலையில், இந்த புத்தகம் வியாழக்கிழமை (மார்ச் 1) முதல் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை யில் 4 இடங்களில் புத்தகங் கள் விற்பனை செய்யப்படு கிறது.சைதாப்பேட்டை, சூளை மேடு ஆகிய இடங்களில் உள்ள ஜெய்கோபால் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி யிலும் சேத்துப்பட்டு ஹாரிங் கடேன் சாலையில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியிலும், புரசைவாக்கம் ஈ.எல்.எம். பேப்ரிஷியஸ் மேல்நிலைப் பள்ளியிலும் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள மாநில பெற்றோர்-ஆசிரியர் கழக அலுவலகத்தில் விற் பனை செய்யப்படவில்லை.தமிழ், ஆங்கிலம், அறிவி யல், சமூக அறிவியல் ஆகிய 4 பாடங்களுக்கான மாதிரி வினா புத்தகம் ரூ.50-க் கும், கணிதப் பாடப்புத்தகத்திற் கான வினாத்தாள்கள் மற் றும் தீர்வுகள் அடங்கிய புத் தகம் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படும். ஆங்கில வழி கணித மாதிரி வினாத்தாள், தீர்வுகள் அடங்கிய புத்தகத் தின் விலை ரூ.85 மற்ற 4 பாடங்களுக்கான ஆங்கில வழி மாதிரி வினா புத்தகத் தின் விலை ரூ.50 என நிர்ண யிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 36 விநியோக மையங்களில் இந்த புத்தகம் கிடைக்கும். முதல் கட்டமாக 50 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு வழங் கப்பட்டுள்ளன. தேவைக் கேற்ப இந்த புத்தகங்கள் கூடுதலாக அச்சிடப்படும்.

Leave A Reply