போபால், பிப். 29-
தகவல் அறியும் உரிமை பெண் ஆர்வலர் ஷேக்லா மசூத் கொலைக்கு முக்கிய காரணமான ஜாகிதா பெர் வஸை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) செவ்வாய்க் கிழமை போபாலில் கைது செய்தது.தகவல் அறியும் உரிமை ஆர்வலரை கொலை செய்ய, ஜாகிதா பெர்வஸ் என்ற பெண் கட்டிட வடிவமைப் பாளர் ஒரு ஒப்பந்தக் கொலையாளியை ஏற்பாடு செய்தார். தனிப்பட்ட விரோதம் காரணமாக இந் தக் கொலையை அவர் செய் ததாக சிபிஐ தரப்பில் தெரி விக்கப்பட்டது. ஜாகிதா போபாலில் உள் அழகு வேலைப்பாடு செய்யும் தொழிலும் நடத்தி வருகி றார்.
குற்றம் சாட்டப்பட்ட பெண் ஏற்பாடு செய்த மற் றொரு நபரையும் சிபிஐ கைது செய்தது.ஆர்வலர் ஷேக்லா மசூத் கொலை தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஏற்பட்ட சந்தேகங் களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புல னாய்வுத்துறை முக்கிய நப ரை கைது செய்துள்ளது.2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதியன்று ஷேக்லா மசூத் குண்டடி பட்ட காயங்களுடன், வீட் டுக்கு வெளியே இருந்த காரில் இறந்து கிடந்தார்.
போபா லில் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற் கச் சென்றபோது இந்த துயர நிகழ்வு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட ஜாகி தாவும், ஒப்பந்தக் கொலை யாளியும் போபால் வரைய றைக்கப்பட்ட நீதிமன்றத் தில் புதன்கிழமை ஆஜர் படுத்தப்பட்டனர்.கொலைக்கான கார ணத்தை அதிகாரிகள் கூற வில்லை. தகவல் அறியும் உரி மைச் சட்டம் 2008ம் ஆண்டு அமலானதில் இருந்து, பல உரிமை ஆர்வலர்கள் கொல் லப்பட்டும் தாக்கப்பட்டும் உள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: