வேலூர், பிப். 29-
வேலூர் மத்திய சிறை யில் முதல் முறையாக பிளஸ் 2 தேர்வு மையம் அமைக்கப்படுகிறது. இதில் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி பேரறிவாளன் உட்பட 8 பேர் தேர்வு எழுதுகிறார்கள். தமிழகம் முழுவதும் வரும் 8ம் தேதி பிள்ஸ் 2 தேர்வு தொடங்கு கிறது. இதற்கான முன்னேற்பாடுகளை கல்வித் துறை எடுத் துள்ளது. வேலூர் மாவட்டத்திலும் தேர்வு பணிகள் நடந்து வரு கின்றன. பள்ளி மாணவர்க ளுடன் வேலூர் மத்திய சிறையில் உள்ள 8 கைதிகளும் பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பித்துள் ளனர். இதில் ராஜீவ் கொலை யாளிகளான முருகன் மற் றும் பேரறிவா ளன் ஆகியோரும் தேர்வு எழுதுகிறார்கள். இதற்கான தேர்வு மை யம் வேலூர் மத்திய சிறையில் அமைக்கப்படுகிறது. மற்ற 6 கைதிகள் சென்னை புழல் சிறையில் தேர்வு எழுத உள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.