முசிறி, பிப்.29- முசிறி அருகே திருச்சி யிலிருந்து சேலம் நோக்கி காரில் சென்ற ஜோதிடர் சாலை ஓரத்தில் இருந்த தென்னை மரத்தில் கார் மோதியதில் பலியானார். திருச்சி ஜீவா நகரைச் சேர்ந்தவர் திருநாவுக் கரசு(48), திருச்சி சேலம், நாமக்கல், திருச்செங் கோடு பகுதிகளில் ஜோதிட பயிற்சி நிலையம் நடத்தி வந்தார். செவ்வாயன்று காலை திருச்சியிலிருந்து ஜோதிடர் திருநாவுக்கரசு தனக்கு சொந்தமான காரில் சேலத்தில் உள்ள ஜோதிட மையத்திற்கு ஓட்டி சென் றுள்ளார்.திருச்சி நாமக்கல் சாலையில் ஏவூர் பிரிவு ரோடு அருகே கார் வந்த போது, எதிர்பாராத வித மாக சாலையின் ஓரத்தில் இருந்த தென்னை மரத்தில் கார் மோதியது. இதில் படு காயமடைந்த திருநாவுக் கரசு 108 ஆம்புலன்ஸ் உத வியுடன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச் சைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துபோனார். சம்பவம் குறித்து முசிறி இன்ஸ்பெக்டர் ரவிசக் கரவர்த்தி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண் டுள்ளார். இறந்து போன திருநாவுக்கரசுக்கு ஒரு மனைவியும் ஒருமகனும் ஒருமகளும் உள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.