நாமக்கல், பிப். 29-நாமக்கல் மாவட்டத்திலுள்ள சுங்கச்சாவடியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் வரையில் வரி செலுத்துவதில்லை என லாரி உரிமையாளர் கள் முடிவு செய்துள்ள னர். இதுகுறித்து தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் கே. நல்லதம்பி செய்தியாளர் களிடம் தெரிவிக்கையில்,நாமக்கல் மாவட்டம் பரமத்தி சாலையில் சேலம் – கரூர் தேசிய நெடுஞ் சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடியை கடந்து நாள்தோறும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வரு கின்றன. ஆனால்.
இச்சா வடி அமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த பிறகும் பொதுமக்களும், கனரக வாகன ஓட்டுநர் களுக்கும் தேவையான கழிப்பிடம், ஓய்வறை மற் றும் இணைப்பு சாலை ஆகிய எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. இதுகுறித்து கடந்த மூன்றாண்டு களாக லாரி உரிமையாளர்கள் சம்மேளத்தின் சார்பில் பல முறை கோரிக்கைகள் வைக்கப்பட்டும், குத்தகைக்கு எடுத்துள்ள தனியார் நிர்வாகம் அடிப்படை வசதிகளுக்கான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளமால் வரி வசூல் மட்டுமே செய்து வருகின்றது.
எனவே, இச்சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்து. அடிப்படை வசதிகள் செய்து தரும் வரை சுங்கச்சாவடியில் வரி செலுத்துவதில்லை என முடிவு செய்துள்ளோம். மேலும் மார்ச்-1 ம்தேதி ( இன்று) சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போரட்டங்களுக்கு பொதுமக்களின் ஆதரவினை கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்தார். இதனிடையே, இப்புகார் குறித்து சுங்கச்சாவடியை நடத்திவரும் நிர்வாக தரப்பிடம் விசாரித்தபோது. சுங்கச்சாவடி அமைந்துள்ள இடத்தில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர தயாராக இருப்பதாகவும், ஆனால், தமிழக வருவாய்துறை, மத்திய நெடுஞ்சாலை துறைக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கான போதிய இடத்தினை வழங்கமால் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.