தானே, பிப்.29- 2008ம் ஆண்டு நடந்த சாலைவிபத்தில் உயிரிழந்த இளைஞரின் பெற்றோ ருக்கு மோட்டார் வாகன விபத்துத் தீர்ப்பாணையம் ரூ.11.08 லட்சம் நஷ்ட ஈடு அளிக்குமாறு உத்தரவிட்டது.விபத்து நஷ்ட ஈடான ரூ.9.16 லட்சத்துடன் ஒப் பிடும் போது அப்பெற் றோருக்கு ரூ.1.16 லட்சம் அதிகமாக அளிக்குமாறு நீதிபதி எஸ்.ஒய். குல்கர்னி உத்தரவிட்டார். மேலும், 3 வருட தாமதத்திற்காக 7 சதவீத வட்டியுடன் (சுமார் ரூ.1.92 லட்சம்) அளிக்கு மாறு தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். யூனிபிரைட் இந்தியா நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த மஞ்சுநாத் சௌத்ரி (27) 2008 நவம்பர் 15ம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண் டிருந்தபோது பின்னால் வந்த டாங்கர் லாரி மோதி யதில் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.ஐசிஐசிஐ லம்பார்ட் பொதுக்காப்பீட்டுக் கழ கம் காப்பீட்டுத் தொகை மிகமிக அதிகமானதென்று மறுத்தது. எனினும் அலட்சி யமான முறையில் டாங்கர் லாரியை ஓட்டியதன் கார ணமாகவே சௌத்ரி உயிரி ழந்தார். மேலும் பெற் றோர்களின் இழப்பைக் கருத்தில் கொண்டு நீதிபதி கூடுதலாக ரூ.1.16 லட்சம் அதிகமாக அளிக்க வேண்டு மென்று தீர்ப்பளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: