அமெரிக்க மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் இந்திய கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங்கை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அனில்கும்ப்ளே நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.கும்ப்ளே வர்த்தக ரீதியில் அமெரிக்கா வந்துள்ளார்.
கும்ப்ளே தன்னுடைய அலுவல்களுக்கிடையே சற்று நேரம் எடுத்துக் கொண்டு யுவ்ராஜ் சிங்கைச் சந்தித்தார். அவரிடம் நலம் விசாரித்த கும்ப்ளே அவருக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்து உரையாடினார்.பாலிவுட் நடிகர் ராண்விஜய், அமெரிக்காவில் யுவ்ராஜ் சிங்கைச் சந்தித்து நலம் விசாரித்தார். இருவரும் நண்பர்கள். ‘ரோடிஸ்’ என்ற விளம்பரப் படப்பிடிப்புக்காக ராண் விஜய் அமெரிக்கா வந்துள்ளார்.யுவ்ராஜ் சிங்குக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை ஒரு மாதத்துக்குள் முடிந்துவிடும். அவர் மார்ச் மாத இறுதிக்குள் இந்தியா திரும்புவார்.

Leave A Reply

%d bloggers like this: