ஷில்லாங், பிப்.29- 126 மெகாவாட் மின் சாரம் உற்பத்தி செய்யும் திற னுடைய மிண்டு-லேஷ்கா நீர்மின் நிலையத்தினை மேகாலயா மாநில முதல்வர் முகுல் சங்மா புதன்கிழமை யன்று துவக்கிவைத்தார்.இத்திட்டத்தின் முதல் பிரிவு, தன் இப்போதைய உற்பத்தியான 186.5 மெகா வாட் மின்சாரத்தைத் தவிர்த்து சுமார் 42 மெகாவாட் மின் சாரத்தைத் தயாரிக்கும். காலம் மற்றும் உற்பத்திச் செலவுகளைக் குறைக்கும் எண்ணத்துடன் மிண்டு-லேஷ்கா நீர்மின்நிலையத் திட்டம் ரூ.300 கோடி மதிப் பீட்டில் 2004ம் ஆண்டு துவக்கப்பட்டது. எனினும் திட்டமிட்டபடி பணிகள் முடியாததன் காரணமாக செலவு ரூ.1,000 கோடியாக உயர்ந்தது.அதிகாரிகளின் திறமை யின்மையே தாமதத்திற்கும் அதிக செலவுக்கும் கார ணம் என்று சங்மா மேடை யிலேயே சுட்டிக்காட்டி னார். அதிகாரிகள் தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார்.

Leave A Reply

%d bloggers like this: