நீலகிரி, பிப். 29-நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் ஆசிரியர்களை உடனடியாக பணி நீக்கம் செய்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியு றுத்தி உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் நீல கிரி மாவட்டச் செயலாளர் ஆர்.பத்ரி, மாவட்டஆட்சித் தலைவரிடம்அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அரசு மேல் நிலைப்பள்ளியில் பணி யாற்றும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் அனைத்து தரப் பினரிடமும் பெரும் அதி ர்ச்சியை ஏற்படுத்தி உள் ளது. மேலும், இச்சம்ப வங்கள் முதல் முறை அல்ல என்பதும், இதுபோன்ற பல சம்பவங்கள் பலமுறை அப்பள்ளியில் நடந்திருப் பதாக தகவல் வெளியாகி உள்ளன. இக்குற்றத்தில் சமீபத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருக்கும் ஆசிரியரைத் தவிர, மேலும் சில ஆசிரியர்கள் அப் பள்ளி மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாக வருவாய் கோட்டாட்சியரின் விசார ணையில் பெற்றோர்கள் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்கள். இதேபோன்ற குற்றச்செ யலில் ஏற்கனவே ஈடுபட்ட ஆசிரியர் ஒருவர் பணியிட மாற்றமும் செய்யப்பட்டி ருக்கிறார். எனவே, இத்தகைய சம் பவங்கள் குறித்து முழுமை யாக விசாரணை மேற் கொள்வதோடு, குற்ற செயல்களில் ஈடுபட்ட ஆசிரியர்களை உடன டியாக பணி நீக்கம் செய் திட வேண்டும். மேலும் மாவட்டத்தில் ஒருசில பள்ளிகளில் இத்தகைய செயல்கள் நடைபெறு வதாக பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர். இது போன்ற செயல்கள் தொட ராமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதுடன், மாணவி களின் பாதுகாப்பை உத் தரவாதப்படுத்த வேண்டும். மேலும், இதுபோன்ற சம் பவங்களால் பாதிக்கப்படு பவர்கள் தயக்கமின்றி புகார் அளிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் அரசின் சார்பில் புகார் பெட்டி வைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழுவின் சார்பில் கேட்டுக்கொள் கிறோம் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: