மன்னார்குடி, பிப். 29-
அகிலஇந்திய வேலை நிறுத்தத்தை முன்னிட்டு செவ்வாயன்று அஞ்சலக ஊழியர்கள் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு செய் ததால் தபால் பணிகள் முற் றிலும் முடங்கின. மன்னார்குடி தலைமை அஞ்சல் நிலையம் முன்பாக மாலையில் நடைபெற்ற பெருந்திரள் வாயிற்கூட் டத்தில் என்எப்பிஇ அஞ் சல் நிலை 4-ன் செயலாளர் என்.விஜயகுமார் தலைமை ஏற்றார். அஞ்சல் நிலை 3-ன் செய லாளர் சி.சீலன்ராஜ், அனைத்திந்திய அஞ்சல் புறநிலை ஊழியர் சங்கத் தின் செயலாளர் எம். உதய குமார் முன்னிலை வகித் தனர்.ஏஐடியுசி ஆர்.ரெத்தி னக்குமார், அனைத்திந்திய அஞ்சல் புறநிலை ஊழியர் சங்கத் தலைவர் எஸ்.ஆர். நடராசன், எஸ்.மோகன் தாஸ், என்எப்பிஇ நிலை 4 ஆர்.கோபாலகிருஷ்ணன், என்எப்டிஇ கே.கரிகாலன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க செயலாளர் கே. பிச்சைக் கண்ணு, காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கச் செயலாளர் எஸ்.சுந்தரராஜகோபாலன், அமைப்பு சாரா தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. காந்தி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க ப.தெட்சிணாமூர்த்தி ஆகி யோர் கோரிக்கைகளை ஆதரித்துப் பேசினர். அனைத்திந்திய அஞ்சல் புறநிலை ஊழியர் சங்கத் தின் பொருளாளர் வி.எம். மதியழகன் நன்றி கூறினார். கூட்டத்தில் வேலை நிறுத்தம் செய்த அனைத் துப் பிரிவு அஞ்சல் ஊழியர் கள் பெருந்திரளாக பங்கேற் றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.