பாட்னா, பிப்.29-முன்னதாக மாநில அரசு பரிந் துரைத்த இடமான மோதி ஹரியைப் புறக்கணித்து கயாவில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்ததற்கு பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் கடுமை யான கண்டனம் தெரிவித்துள் ளார்.இது மக்கள் உணர்வுகளின் மீதான தாக்குதலாகும். கயாவில் மத்திய அரசு பல்கலைக் கழ கத்தை அமைக்கும் முயற்சியை மாநில அரசு ஒருபோதும் ஏற் றுக்கொள்ளாது என்று மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபலுக்கு நிதீஷ்குமார் கடிதம் எழுதியுள்ளார்.கயாவில் பல்கலைக்கழ கத்தை அமைப்பதற்காக தேவை எதுவும் இல்லை. அங்கு ஏற் கெனவே மக்த் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. மத்திய பல்கலைக்கழகத்தை அமைக்க வேண்டுமென்று மத்திய அரசு விரும்பினால், மகாத்மா காந்தி வேலையிடமான மோதிஹரி யில் அமைப்பதற்கான மாநில அரசின் முன்மொழிவை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுவே தேசத் தந்தைக்கு அளிக்கும் மிகப் பெரிய கௌரவமாகும் என்று நிதீஷ் குமார் தெரிவித்தார்.மோதிஹரியில் மத்திய பல் கலைக்கழகம் அமைக்கத் தேவை யான இடத்தை மாநில அரசு இலவசமாகவே வழங்கும். மேலும் மாநில அரசு சொந்த மாகவே ஒரு பல்கலைக்கழ கத்தை அமைக்கும் வலிமை உடையது என்றும் நிதீஷ் குமார் தெரிவித்தார்.

Leave A Reply