புதுதில்லி, பிப்.29-நடப்பாண்டில் இந்தியாவிற்கு 60 லட் சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள் ளனர். சுற்றுலாத்துறையை விரைவாக மேம்படுத்துவதற்காக 2016ம் ஆண்டிற்குள் சுற்றுலாப் பயணிகளின் வருகையை 1.1 கோடியாக அதிகரிக்க மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் சுபோத் காந்த் சகாய் திட்டமிட்டுள்ளார்.ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் இந்தி யாவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணி களை திரும்பத் திரும்ப இந்தியாவிற்கு வர வழைப்பதற்காக வருடத்தின் 365 நாட்களும் சுற்றுலா நாட்களென மாற்று வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று 2010-11ம் ஆண்டிற்கான தேசிய சுற்றுலாத்துறை விருது வழங்கும் விழாவில் உரையாற்றினார்.50 தலைப்புகளின் கீழாக அமைந்துள்ள 78 விருதுகளை ஜனாதிபதி பிரதிபா பாட் டீல் வழங்கினார்.சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற் காக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், ஹோட்டல்கள், சுற்றுலா மற்றும் சுற்றுலா ஏற்பாடு செய்பவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகளை அங்கீ கரித்து, அவர்களை ஊக்கப்படுத்தும் வித மாகவும் ஆரோக்கியமான போட்டியை உருவாக்குவதையும் மையமாகக் கொண்டு இவ்விருதுகள் வழங்கப்பட்டன.இவ்விழாவில் மத்தியப் பிரதேசத்திற்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் 4 விருதுகள் வழங்கப்பட்டன. சிக்கிம் மாநிலத்தின் சிறந்த சுற்றுலா உள்கட்டமைப்பிற்காகவும் சுற்றுலா தொடர்பான நிகழ்ச்சிகளுக்காக வும் 23 விருதுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.