மதுரை,பிப்.29- மதுரை மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்களை சில அதிமுக உறுப்பினர்கள் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்த திமுக மாமன்ற உறுப்பினர்கள் சாலைமறிய லில் ஈடுபட்டனர். மதுரை மாநக ராட்சி மாமன்றக்கூட்டம் புதனன்று மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா தலை மையில் நடைபெற்றது. ஆணையா ளர் சௌந்தராஜன், துணைமேயர் கோபாலகிருஷ்ணன், மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாமன்றக் கூட்டம் துவங்கியவுடன் கேள்வி நேரம் என மேயர் அறிவித்தார். முதலில் எதிர்கட்சித்தலைவரை பேச அனுமதி அளித்துவிட்டுத்தான் கேள்வி நேரம் துவங்க வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் எம்.எல்.ராஜ் கூறினார். அதற்கு அதிமுக உறுப்பினர் கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர் கட்சித் தலைவரை பேச அனுமதிப் பது தான் மரபு. ஆனால், மாநகராட்சி யில் மரபு மீறப்படுகிறது என்று திமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித் தனர். சட்ட விதிகளுக்கு ஏற்ப இன்னும் உங்கள் கட்சிக்கு எதிர்கட்சி அங்கீ காரம் வழங்கவில்லை என மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா பதிலளித்தார். அதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கேபிள் கண்ணன் தன் கையில் கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டிலைக் காட்டி, மதுரை நகரில் குடிநீரில் சாக்கடை கலந்து வருகிறது. இதுகுறித்து இங்கு பேசாமல் எங்கு பேசுவது எனக்கேட்டார். ஆனால், அதிமுக மண்டலத்தலைவர் ராஜ பாண்டியன் பேசுமாறு மேயர் கூறி னார். இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் மேயர் இருக் கைக்கு முன்பு வந்து கண்டன முழக் கங்கள் எழுப்பினர். அவைக்காவலர் களைக் கொண்டு திமுகவினரை வெளியேற்ற மேயர் உத்தரவிட்டார். ஆனால், திமுகவினரை பேச அனு மதிக்க வேண்டும் எனக்கூறி அக்கட் சியினர் வெளியேறாமல் முழக்கங்கள் எழுப்பியவாறு இருந்தனர். அப் போது திமுக ரவுடிகளை வெளி யேற்று என அதிமுகவினர் முழக்கம் எழுப்பினர். இதனால் இரு கட்சி உறுப்பினர்களுக்கிடையே வாக்குவா தம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட் டது. ஆத்திரமடைந்த அதிமுக உறுப் பினர்கள் சிலர், திமுக மாமன்ற உறுப் பினர்களைத் தாக்க ஆரம்பித்தனர். இதில் மாணிக்கம் என்ற திமுகவின் கொறடா கீழே விழுந்தார். திமுக வினரை காவல்துறையை வைத்து வெளியேற்ற மேயர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து திமுக உறுப் பினர்கள் காவல்துறையால் வெளி யேற்றப்பட்டனர்.இதுகுறித்து எதிர்கட்சித்தலைவர் எம்.எல்.ராஜ் கூறுகையில், கடந்த மூன்று கூட்டங்களாக எங்களைப் பேசவிடாமல் மேயர் தடுக்கிறார். பேசவாய்ப்பு கேட்டால் அதிமுக உறுப்பினர்கள் தாக்குகின்றனர். இந்த அநியாயத்தைக் கண்டித்து வெளி நடப்பு செய்துள்ளோம் என்று அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து திமுக மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி முன்பு சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டு கலைந்து சென்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.