தூத்துக்குடி, பிப். 29-
வாக்குமூலத்தில் போலி கையெழுத்து போட்டு வழக் குப் பதிவு செய்ததாக சப்-இன்ஸ்பெக்டர் உள் பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர். தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் திருவரங் கம்பட்டியை சேர்ந்தவர் பாலையா. இவருடைய மகன் டேனியல். இவருக்கும் இவரு டைய பெரியப்பா பொன்னுசாமி மகன் பால சிங்கிற்கும் நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 8-5-11 அன்று டேனியல் அந்த பகுதியில் உள்ள தனது வய லில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு இருந்ததாகவும், அப்போது அங்கு வந்த பாலசிங் கும், அவருடைய மகன் ஜெப செல்வமும் சேர்ந்து டேனி யலை மண்வெட்டியால் தலை யில் வெட்டி, அடித்து உதைத்த தாகவும் கூறப்படுகிறது.இதில் படுகாயமடைந்த டேனியல், பாளையங்கோ ட்டை ஐகிரவுண்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நீண்ட நாட்க ளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரி டம், செய்துங்கநல்லூர் போலீ சார் வாக்கு மூலம் பெற்றனர். இதற்கு சாட்சியாக டேனிய லின் மகன் தினகரன் சாட்சி கையெழுத்துப் போட்டார். இதைத்தொடர்ந்து மறு நாளும் டேனியலிடம் போலீசார் ஒரு வாக்குமூலம் பெற்றனர். அந்த வாக்குமூலத்தில் தினகரன் கையெழுத்துப் போடவில்லை. ஆனால் தினகரன் கையெ ழுத்தை போலீசாரே போ ட்டு பாலசிங், அவருடைய மகன் ஜெபசெல்வம் ஆகிய 2 பேர் மீதும் கொலை முயற்சி வழக் குப் பதிவு செய்யாமல், சாதா ரண பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ததாக கூறப்படு கிறது. இது பற்றி தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் டேனியல் ஒரு வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதி பதி விசாரித்து, சம்பந்தப் பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீ சாருக்கு உத்தரவிட்டார்.இதைதொடர்ந்து செய் துங்கநல்லூர் போலீஸ் நிலை யத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் செல்வி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெய்லூ காத்த பெருமாள், போலீசார் ஜோதி, வெள்ளேரி ரூசோ ஆகிய 4 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 218 (தண்ட னையில் இருந்து காப்பாற்று வது), 468 (மோசடி கையெ ழுத்து), 471 (போலி கையெழுத்தை உண்மை போன்று பயன் படுத்தி நீதிமன்றத்தில் தாக் கல் செய்தல்) ஆகிய 3 பிரிவு களில் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

%d bloggers like this: