ஜானகி அம்மாளின் சிறப்புக்குரிய பணி பெண்களை அரசியல் இயக்கத்திற்கும், விவசாயிகள் இயக்கத்திற்கும், தொழிற்சங்க இயக்கத்திற்கும் கொண்டுவந்ததாகும். ஐம்ப தாண்டுகளுக்கு மேலாக அவர் இப்பணியை செய்து வந்தார். 1940ம் ஆண்டுகளில் மதுரையில் கடும் எரி பொருள் பற்றாக்குறை ஏற்பட்டபொழுது பெண்களைத் திரட்டி மண்ணெண்ணெய், விறகு போன்றவற்றை குறித்த விலையில் கிடைக்கச் செய்வதிலும், உணவுப் பொருட்கள் ரேசன் கடைகளில் முறையாக கிடைக்கச் செய்வதற்கும் அம்மாள் தலைமையில் கட்சி பெரும் இயக்கங்களை நடத்தி யுள்ளது.ரேசன் கடைகளில் மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி விநியோகத்தை சரிவர நடத்துவதில் ஜானகி அம்மாவும் இதர பெண் தொண்டர்களும் அயராது பாடுபட்டனர். மில் தொழிலாளர் பிரச்சனைக்காக போராடியதன் மூலம் அந்தத் தொழிலாளர் குடும்பத்துப் பெண்களுடன் ஜானகி அம்மாவுக்கு மிகுந்த பரிச்சயம் ஏற்பட்டது. மதுரையில் நடை பெற்ற அரசியல் கூட்டங்களில் ஆண்களுக்கு சம எண் ணிக்கையில் பெண்கள் கலந்துகொள்வது என்பது சர்வ சாதாரண நிகழ்ச்சியாக இருந்தது. அதேபோல கைத்தறி நெசவுத் தொழிலுக்கு பெயர் பெற்ற மதுரை நகரில், கைத் தறி நெசவாளர் சங்கத்தை உருவாக்குவதிலும், அதை பலம் பெறச் செய்ததிலும் ஜானகி அம்மாவுக்கும் பங்கு உண்டு.1974ம் ஆண்டில் நடைபெற்ற தமிழக ஜனநாயகமாதர் சங்கத்தின் முதல் மாநாட்டில் ஜானகி அம்மா தலைவ ராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாப்பா உமாநாத் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினராக ஜானகி அம்மா தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.நாடகங்கள் மற்றும் பாடல்கள் மூலமாக விடுதலைப் போராட்ட உணர்வை மக்களிடம் விதைத்தவர் அம்மா.தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையும் அம்மாவுக்கு உண்டு.இந்திய அரசாங்கமும், தமிழக அரசாங்கமும் தலை சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் என்ற முறையில் தாமிரப் பட்டயம் அளித்து கௌரவிக்கவும் தியாகிகள் ஓய்வூதியம் அளிக்கவும் முன்வந்தபோது கட்சியின் கட்டளைப்படி ஜானகியம்மா அவற்றை நிராகரித்துவிட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.