திருவாரூர், பிப். 29-
2012 மார்ச்,ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வினை சிறப்பாக நடத்துதல் மற்றும் ஒழுங்கீன செயல்பாடுகளை முற் றிலும் கட்டுப்படுத்துதல் தொடர்பாக தேர்வுக்குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் சி.நடராசன் தலைமையில் மாவட்ட ஆட்சி யரக கூட்ட அரங்கில் தேர்வுக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.வினாத்தாள் கட்டுக்கள் பாதுகாக்கப்படும் மையங்களுக்கு 24 மணிநேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துதல், ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடு வதை தடுத்தல், தேர்வுமையங்கள் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கி யப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விரிவாக வருவாய்த் துறை, காவல்துறை, கல்வித்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் சி.நடராசன் ஆலோசனை நடத்தினார்.இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மா. சுப்பிரமணியன், கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் ஆர். வைத்திலிங்கம், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் ஆ.ஜெயசுப்பிரமணியன் (நன்னிலம்), பெரியய்யா (திருவாரூர்), பி.ஏ. கணேசன் (மன்னார்குடி), முனியப்பன் (முத்துப்பேட்டை), மாவட்ட கல்வி அலுவலர் தாமஸ்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: