புதுதில்லி, பிப். 29- முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ள ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில், பணப் பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை பெறு வதற்காக மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ) விரைவில் நீதியியல் வேண்டுகோள் கடிதத்தை 2 நாடுகளுக்கு அனுப்புகிறது.திமுகவைச் சேர்ந்த தயா நிதிமாறன் அமைச்சர் அதி காரத்தை பயன்படுத்தி ரூ.547 கோடியை மலேசிய நிறுவனத் திடம் லஞ்சம் பெற்றதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச் சாட்டுகளை மாறன் மறுத்துள்ளார். பணப் பரிவர்த்தனை குறித்த விவரங் களை புலனாய்வுத்துறை ஆய்வு செய்ததில் கரீபிய தீவான பெர்முடா மற்றும் பிரிட்டன் மூலமாக இந்திய நிறுவனங்களுக்கு பணம் வந்த விவரங்கள் தெரியவந்துள்ளன என்று சிபிஐ தரப்பு தகவல்கள் கூறுகின்றன.காங்கிரஸ் தலைமையி லான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதல் 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் தொலைத்தொடர் புத்துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அப்போது அவர், மலேசியாவின் மேக்சிஸ் நிறு வனம் தனது நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கு சாதக மாக செயல்பட்டார் என ஏர் செல் முன்னாள் தலைவர் சி. சிவசங்கரன் குற்றம் சாட்டி யிருந்தார். மேக்சிஸ் நிறுவனத் திற்கு தயாநிதி மாறன் சாதக மாக நடந்து கொண்டதால் மாறன் குடும்பத்தினருக்கு சொந்தமான சன் டி.வி. நெட் வொர்க்கில் ஆஸ்ட்ரோ நெட் வொர்க் மூலம் மேக்சிஸ் முத லீடு செய்தது குறித்தும், குற்றம் சாட்டியிருந்தார்.மேக்சிஸ் நிறுவனத்தில் இருந்து, சன் டி.வி. நெட்வொர்க் குழுமத்திற்கு பணம் வந்தது தொடர்பாக மலேசியா மற்றும் மொரீஷியசில் மட்டும் பணப் பரிமாற்ற விவரங்களை பெற திட்டமிட்டிருந்த சிபிஐ, மார்ச் முதல் வாரத்தில் கரீபியன் தீவு, பெர்முடா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கும், நீதியியல் வேண்டுகோள் கடிதம் அனுப்ப முடிவு செய்துள்ளது.முன்னாள் அமைச்சர் தயா நிதி மாறனை மட்டுமல்லாமல், அவரது சகோதரரான சன் டி.வி. இயக்குநர் கலாநிதி மாறனை யும் மேக்சிஸ் நிறுவனத்தலை வர் டி.ஆனந்த கிருஷ்ணன், ஆஸ்ட்ரோ அலி ஆசியா நெட் வொர்க் சீனியர் அதிகாரி மேக் சிஸ் ரால்ப் மார்ஷல் மீதும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. ஆஸ்ட்ரோ அலி ஏசியா நெட் வொர்க், சன் டைரக்ட் டிவி, மேக்சிஸ் கம்யூனி கேஷன் ஆகிய 3 நிறுவனங்களுக்கு ரகசிய சட்ட விரோத செயல் பாடு இருந்துள்ளது என்றும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.விசாரணையின் போது, மலேசியாவின் மேக்சிஸ் நிறு வனத்திற்கு சாதகமாக செயல் பட்டதால், அந்நிறுவனம் மறை முகமாக சன் டிவி குழுமத் திற்கு பணம் அளித்ததில் தயா நிதி மாறனுக்கு தொடர்பு இருப் பதை உறுதிப்படுத்தி உள்ள தாகவும் சிபிஐ கூறியுள்ளது.சிவசங்கரனின் கோப்பு கள், திட்டமிட்டு தாமதம் செய் யப்பட்டதற்கான நேரடி ஆதா ரங்கள் உள்ளதையும் மத்திய புலனாய்வுக் கழக ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: