இரண்டாம் உலகப் போருக்குப் பின்புதான் உலக வங்கி மற்றும் ஐ.எம்.எப் ஆகிய இரண்டு அமைக்கப்பட்டன. அப்போதிருந்து உலக வங்கியின் தலைவராக அமெரிக்காவைச் சேர்ந்தவர்தான் இருந்து வருகிறார். ஐரோப்பிய நாடுகளோடு எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுக் கொண்டனர். உலக வங்கிக்கு அமெரிக்கரே தொடர்ந்து தலைவராக இருப்பது என்றும், அதற்குப் பதிலாக ஐ.எம்.எப். தலைமைப்பொறுப்பை ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவருக்குத் தருவது என்பதுதான் அந்த ஒப்பந்தமாகும். அப்படித்தான் இதுவரை தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். வளரும் நாடுகளின் பொருளாதார பலம் அதிகரித்துள்ளதால் இந்த எழுதப்படாத ஒப்பந்தம் கைவிடப்பட வேண்டும் என்ற வலுவான கோரிக்கை அண்மைக்காலங்களில் எழுந்திருக்கிறது. இதைத்தான் இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன.

Leave A Reply

%d bloggers like this: