அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள புற்றுநோய்க்கான மருந்துபற்றாக்குறையின் காரணமாக, அதற்கு ஈடான மருந்தை இந்தியாவிடமிருந்து அமெரிக்கா வாங்குகிறது. புற்றுநோய் சிகிச்சையான கீமோதெரபி சிகிச்சைக்கு பயன்படுத்தும் டாக்ஸில் என்ற மருந்திற்கு அமெரிக்காவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனை சரிசெய்யும் வகையில் அதற்கு ஈடான லிப்போடாக்ஸ் ஓவரி என்னும் மருந்தினை இந்தியாவிடமிருந்து வாங்க அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான பெடரல் டிரக் அட்மினிஷ்ட்ரேசன் முடிவு செய்துள்ளது. இம்மருந்துஎலும்பு மற்றும் தோல் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுகிறது. இம்மருந்தை இந்திய நிறுவனமான சன் பார்மா குளோபல் தயாரிக்கிறது. மருந்தின் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் இந்நிறுவனத்தோடு அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: