புதுச்சேரி, பிப். 29-
புதுச்சேரி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகை யிட்ட தனியார் பள்ளி ஆசி ரியர்கள் கைது செய்யப்பட் டனர்.அரசு உதவி பெறும் பள்ளிகளில் பல ஆண்டு களாக சொற்ப ஊதியம் பெற்று பணி செய்து வரும் தனியார்பள்ளி ஆசிரியர் களுக்கு உருவாக்கப்பட்ட பதவிகளுக்கான அரசு ஆணை எண்.86 யை உடனே அமல்படுத்த வேண் டும். கல்வித்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
அரசு ஆசிரியர்களுக்கு இணை யான அனைத்து சலுகை களையும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட் டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு தனியார் பள்ளி ஊழியர் சங்கங்களின் சம்மேளன தலைவர் வின்சென்ட் ராஜ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கிரிஸ் டோபர், அரசு ஊழியர் சம்மேளன கௌரவ தலை வர் பாலமோகனன், தலை வர் ஆனந்தராஜ், ஆசிரியர் சங்க கவுரவ தலைவர் சண் முகம், தலைவர் வசலா, நிர்வாகி சுமதி உள்ளிட்ட தனியார் பள்ளி ஆசிரியர் கள் கல்வித் துறையை முற் றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 98 ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: