புதுதில்லி, பிப். 29-
மத்திய-மாநில அரசு களின் மக்கள்விரோதக் கொள்கைகளை எதிர்த்து இடதுசாரிக் கட்சி தொழிற் சங்கங்கள் விடுத்த பிப்ரவரி 28 வேலைநிறுத்த அறை கூவல் மகத்தான வெற்றி பெற்றது. நாட்டின் நான்கு திசைகளிலும் அரசின் கொள்கை எதிர்ப்பு முழக் கங்களும் பேரணிகளும் எதிரொலித்தன.
ஆந்திரா
ஆந்திராவில் வேலை நிறுத்தம் பெரும் வெற்றி பெற்றது. ஆயிரக்கணக் கான சிபிஎம், சிபிஐ, சிபிஐ (எம்எல்) விடுதலை, ஆர்எஸ்பி தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். மாநிலம் எங்கும் மாநில அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை யும் மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை யும் எதிர்த்து தர்ணா, சாலை மறியல், பேரணி போன்ற வை நடத்தப்பட்டன.ஹைதராபாத் நகரில் பந்த் சற்று பலவீனமாக இருந்தது.
ஆனால் விசாகப் பட்டினம், விஜயவாடா, கம்மம், வாரங்கல், நல் கொண்டா, கர்னூல், திருப் பதி போன்ற நகரங்களில் பந்த் பெரும் வெற்றிபெற்றது. சிபிஎம் மாநிலச் செயலாளர் பி.வி.ராகவலு, சிபிஐ மாநி லச் செயலாளர் கே.நாரா யணா, சிபிஐ (எம்எல்) விடு தலை தலைவர் முராஹரி, எஸ்யுசிஐ (சி) தலைவர் ஜானகிராமுலு உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட் டனர். ஹைதராபாத்தில் மட்டும் 850 பேர் கைது செய்யப்பட்டு, சில மணி நேரம் கழித்து விடுதலை செய்யப்பட்டனர்.
திரிபுரா
திரிபுராவில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
பந்த் வெற்றிகரமாக நடந்தது. பள்ளிகள், அலுவலகங்கள், கடைகள், சந்தைகள் மூடப் பட்டன. சாலைகளில் வாக னங்கள் ஓடவில்லை. தேயி லைத் தோட்டங்கள், சணல் ஆலைகள் ஆகியவற்றில் வேலை நிறுத்தம் நூறு சத வீத வெற்றிபெற்றது. மத்திய, மாநில அரசு அலுவலகங் கள் வெறிச்சோடிக்கிடந்தன.
தாரிகாமி கண்டனம்
ஸ்ரீநகரில் தொழிலா ளர்கள் நடத்திய பேரணி மீது காவல்துறை நடத்திய தாக்குதலை சட்டமன்ற உறுப்பினரும் சிஐடியு மாநி லத்தலைவருமான தாரிகாமி வன்மையாகக் கண்டித்துள் ளார்.
அரசின் தவறான கொள்கைகள், தலைவிரித் தாடும் ஊழல், தொழிலாளர் பிரச்சனைகள் ஆகியவற் றை எதிர்த்து நடைபெற்ற நாடு தழுவிய பந்த்தின் ஒரு அங்கமாக காஷ்மீரில் பேரணி நடத்தப்பட்டது.மக்கள் மீது நடத்தப் பட்ட தாக்குதல் ஜனநாயக விரோதமானது. அமைதியாக எதிர்ப்பு தெரிவிப்பது மக்க ளின் அடிப்படை உரிமை யாகும். அந்த உரிமையை பாதுகாத்து மதிப்பது அர சின் கடமையாகும். அமை தியான, கண்ணியமான ஆர்ப்பாட்டங்களை வன் முறையால் தடுப்பது தேவை யற்றதும் அநியாயமானதும் ஆகும் என்று அவர் கூறி னார்.

Leave a Reply

You must be logged in to post a comment.