பாங்குரா, பிப்.29- பாங்குரா சம்மிளானி மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணை ஒரு கும்பல் பாலியல் வன்புணர்ச்சி செய்தது. வாய் பேச முடியாத, காது கேளாத நிலையில் இருந்த அப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை குறித்து அப்பெண்ணின் பெற் றோர்கள் காவல்துறையில் புகார் செய்தனர். தடய அறிவியல் சோத னைக்காக அப்பெண்ணைக் காவல் துறையினர் கொல்கத்தாவிற்கு அழைத்துச் சென்றனர்.கொல்கத்தா அரசு மருத்துவ மனைக்கு அப்பெண்ணை அழைத் துச் செல்ல தம்மிடம் காவல்துறை யினர் அனுமதி பெற்றுள்ளனர் என்று கல்லூரியின் முதல்வர் மனோஜ் சௌத்ரி தெரிவித்தார். மேலும் காவல்துறையினருடன் 2 மருத்துவர்களும் உடன் சென் றுள்ளனர்.இச்சம்பவம் குறித்து விசாரிப் பதற்காக 3 பேர் கொண்ட குழுவை நியமனம் செய்துள்ளதாக மருத் துவமனைக் கண்காணிப்பாளர் பஞ்சனன் குண்டு தெரிவித்தார்.19 வயதான அப்பெண்ணை திங் களன்று ஜுனியர் டாக்டர் ஒருவர் வன்புணர்ச்சி செய்ததாக அப் பெண்ணின் தாயார் புகார் செய் தார். நெஞ்சு வலிக்குச் சிகிச்சை பெற வந்த அப்பெண் மயங்கிய நிலை யில் மருத்துவமனையின் மருந்துப் பிரிவில் நிர்வாணமான நிலையில் காணப்பட்டதாக அவர் தெரி வித்தார்.அப்பெண்ணின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின்படி முதல் தக வல் அறிக்கை பதிவு செய்யப் படவில்லை. மருத்துவமனை அதி காரிகள் கொடுத்த புகாரின் அடிப் படையில் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறைக் கண் காணிப்பாளர் பிரணாப் குமார் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.