புதுதில்லி: மும்பையில் உருவாகி வரும் 6 ஸ்கார்பின் நீர்மூழ்கிக் கப்பல்களில் பொருத்துவதற்காக இந்தியாவில் தயாரிக் கப்பட்ட உபகரணங்களை பிரெஞ்ச் நிறு வனமான டிசிஎன்எஸ் விநியோகித் துள்ளது.பாதுகாப்புத்துறைக்குச் சொந்தமான மசாகான் டாக்யார்ட்ஸ் லிமிடெட் (எம் டிஎல்) நிறுவனத்தில், ரூ.23 ஆயிரம் கோடி மதிப்பில் டிசிஎன்எஸ் நிறுவன தொழில் நுட்பத்தின் உதவியுடன் 6 ஸ்கார்பின் நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டப்பட்டு வரு கின்றன.இக்கப்பல்களில் உபயோகப்படுத்தப் படும் உபகரணங்கள் இந்திய நிறுவனத் தால் தயாரிக்கப்பட்டிருந்தாலும் அவற்றை விநியோகம் செய்யும் பொறுப்பை டிசி என்எஸ் இந்தியா நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. குறித்த நேரத்தில் உப கரணங்களை விநியோகிப்பது மற்றும் கடு மையான தரக்கட்டுப்பாட்டு விதிகளுக் கேற்ப உபகரணங்கள் தயாரிக்கப்பட்டுள் ளன என்று டிசிஎன்எஸ் இந்தியா நிறு வனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.இக்கப்பல்களில் உபயோகப்படுத்தப் படும் உபகரணங்களை விசாகப்பட்டினத் தைச் சேர்ந்த ஃப்ளாஷ் போர்ஜ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயா ரித்து வருகிறது.இந்திய அரசு மற்றும் பிரான்ஸ் அர சுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போது டிசிஎன்எஸ்ஸின் சிறப்பான செயல் பாட்டை மசாகான் டாக்யார்ட்ஸ் லிமி டெட் நிறுவனம் பாராட்டியுள்ளது என்று டிசிஎன்எஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்தது.

Leave A Reply

%d bloggers like this: