புதுதில்லி, பிப். 29-
நார்வேயில் சிக்கித்தவிக் கும் இரண்டு இந்தியக் குழந் தைகளை அவர்களுடைய சித்தப்பாவிடம் ஒப்படைப் பது என்று நார்வே குழந் தைகள் நல சேவை எடுத்த முடிவை மிகப்பெரும் முன் னேற்றம் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார்.இந்திய அரசின் சிறப்புத் தூதர் அளிக்கவுள்ள அறிக் கைக்காகக் காத்திருப்பதாக வும் அவர் கூறினார்.
அபிக் யான், ஐஸ்வர்யா ஆகிய இரு குழந்தைகளின் இரு வழி தாத்தா, பாட்டிகள், பிருந்தா காரத் உடன் சென்று வெளி யுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவைச் சந்தித்தனர். எப்பாடுபட்டா வது குழந்தைகளை இந்தியா வுக்கு கொண்டு வந்துவிடு வோம் என்று குழந்தைக ளின் தாத்தா மனோடோஷ் சக்ர பர்தி கூறினார்.முன்னதாக குழந்தை களின் தாத்தா, பாட்டிகள் நால்வரும் பிருந்தா காரத், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பலர் நார்வே தூதரகத்தின் முன் தர்ணா நடத்தினர்.
நார்வே குழந்தைகள் நல சேவை தன்னுடைய முந் தைய நிலைபாட்டை மாற் றிக்கொண்டது பெரிய விஷ யமாகும் என்று பிருந்தா காரத், பிடிஐ செய்தியாளர் களிடம் கூறினார். குழந் தைகளின் இருவழி தாத்தா பாட்டிகளும் உற வினர்களும் மற்றும்ப லரும் நார்வே தூதரகத்தின் முன் தர்ணா போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின் றனர்.இரண்டு குழந்தைகளை யும் இந்தியாவுக்கு கொண் டுவரும் முயற்சிகளில் பிருந்தா காரத் முன்னிலையில் நின்று செயல்பட்டு வருகிறார்.
நார்வே தூதரகம் முன் நடைபெறும் தர்ணாவை விலக்கிக்கொள்வது குறித்து அரசின் சிறப்புத்தூதர் அறிக் கை கிடைத்த பின்னரே முடிவு செய்யப்படும் என் றும் அவர் சொன்னார்.சில விஷயங்களுக்கு விளக்கம் தேவைப்படுகிறது. வேறு சில விஷயங்களில் தெளிவில்லை. எனவே அறிக்கை கிடைக்கும் வரை காத்திருப்பது நல்லது என்று அவர் கூறினார்.குழந்தை வளர்ப்பில் இரு நாட்டு கலாச்சாரங்க ளின் மோதலால் குழந்தை கள் தாய் தகப்பனாரிடமி ருந்து நார்வே அரசால் பல வந்தமாக பிரிக்கப்பட்டுள் ளனர். குழந்தைகள் தற் போது நார்வே அரசின் பராமரிப்பு இல்லங்களில் இருந்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: