நாகப்பட்டினம், பிப்.29-
நாகை மணிக்கூண்டில் வைக்கப்பட்டிருந்த எலிச பெத் மகாராணி அனுப்பிய கடிகாரம் எங்கே? என்று நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.நாகை நகர்மன்றக் கூட் டம் புதன்கிழமை மதியம் நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் மஞ்சுளா சந்திர மோகன் தலைமை வகித்தார்.ஆணையர் ஏ.அப்துல் லத்தீப் முன்னிலை வகித் தார். நகர்மன்ற உறுப்பினர் தண்டபாணி பேசும்போது கூறியதாவது:நாகை ரயில் நிலையம் முன்பு இருந்த மிகப் பழ மையான மணிக்கூண்டை தேவையில்லாமல் இடித்தீர் கள். ஆனால் அந்த மணிக் கூண்டுக்கு இங்கிலாந்து எலிச பெத் மகாராணி அவரு டைய ஆட்சிக்காலத்தில் அனுப்பி வைத்த மிகப் பெரிய கடிகாரம் என்ன ஆனது? அதைத் தேடிக் கண்டுபிடித்து அருங்காட் சியகத்தில் வைப்பீர்களா? என்று கேட்டார்.இதற்கு பதிலளித்த ஆணை யர், அந்தக் கடிகாரம் நகர் மன்ற அலுவலகத்தில் நினை வுச்சின்னமாக பத்திரமாக இருக்கிறது என்றார். மீண்டும் தண்டபாணி பேசுகையில், குப்பை குவி கின்ற இடத்தில் குப்பைத் தொட்டி வைப்பது இல்லை என்று கூறியதற்கு ஆணை யர், குப்பைத் தொட்டி வைக்கின்ற இடங்களில் மக்கள் குப்பைகளை கொட் டுவது இல்லை என்று பதி லளித்தார். நகரமெங்கும் பன்றிகள், ஆடு, நாய்களைப் போல் திரிகின்றன. இதற் கென்ன நடவ டிக்கை என்று கேட்டதற்கு, மாவட்ட ஆட்சி யரின் அனுமதி பெற்று பன் றிகள் அப்புறப்படுத்தப் படும் என்று பதிலளிக்கப் பட்டது.சர்புதீன் என்ற நகர்மன்ற உறுப்பினர், வெளிப்பா ளையத்தில் அமைந்திருக் கின்ற மிகப்பெரிய குடிநீர்த் தேக்கத்திற்கு சரியான பாது காப்பு இல்லாத நிலைமை உள்ளது. எனவே அங்கு நாள் முழுவதும் காவலர் களைப் போட்டு எந்தவித விபரீத விளைவும் ஏற்பட்டு விடாமல் குடிநீர் பாதுகாக் கப்பட வேண்டும் என்று பேசினார். நகர்மன்ற உறுப்பினர் அபுபக்கர் பேசும்போது, நகரமெங்கும் பாதாளச் சாக்கடைக்கு தோண்டிய தில் சாலைகள் தெருக்க ளெல்லாம் பள்ளமும் மேடு மாகக் கிடக்கின்றன. தெருக் களின் நடுவே அமைக்கப்பட் டுள்ள பாதாளச் சாக்கடைத் திறப்பு மூடிகள் மிக உயர மாக இருப்பதால் வாக னங்களில் செல்லும் மக் களும் மாணவர்களும் இடறி விழுகின்றனர். எனவே எல்லா பகுதிகளுக்கும் விரைவாக சாலைகள் அமைத்து சமப் படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.மேலும் 14வது வார்டு உறுப்பினர் சித்திரவேல் பேசும்போது, சுனாமி வீடு கள் கட்டப்பட்ட புதிய நம் பியார் நகரில் மேற்குப்புறத் தில் உள்ள பல தெருக்க ளுக்கு தெருவிளக்குகள் இல்லை. குடிநீர்க் குழாய் கள் அமைக்கப்படவில்லை. இந்த அடிப்படை வசதிகளை உடனடியாக அமைத்துத் தரவேண்டும் என்று கூறினார். மேலும் உறுப்பினர்கள் பேசும்போது, நாகை நக ருக்கு குடிநீர் தருகின்ற ஓடாச்சேரி பகுதியையும், 1991ம் ஆண்டு 8 கோடி ரூபாய் செலவில் ஆறு களின் நடுவே அமைக்கப் பட்ட குடிநீர் ஆழ்குழாய் களையும் ஆய்வு செய்து செப்பனிட வேண்டும். கொசுத்தொல்லையை ஒழிக்க மருந்து தெளித்தும், குடி நீரில் சாக்கடை கலக்காத வாறும் நகராட்சி நிர்வாகம் விரைந்து கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: